வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு.. அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..

வெள்ளை மாளிகையில் தனக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

An enthusiastic reception at the White House.. Prime Minister Modi tweeted thanking President Joe Biden and Jill Biden..

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரச முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஒரே நேரத்தில் பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர் யோகா செய்து சாதனை படைத்ததால் இந்த நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து கொடுத்தனர்.

விதவிதமான உணவுகள்: ரசித்து சாப்பிட்ட பிரதமர் மோடி!

இன்று இரவு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். வெகு சிலரே அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறை உரையாற்றி உள்ளதால், மோடியின் இந்த உரை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடனின் விருந்தோம்பலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அழகிய தருணங்கள் அடங்கிய வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios