இந்தியாவிலேயே ஜெட் எஞ்ஜின்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு (IAF) போர் விமானங்களைத் தயாரிக்க இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விண்வெளி பிரிவு வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸின் F414 இன்ஜின்களை இந்தியாவில் கூட்டாகத் தயாரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
"இது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் நீண்டகால கூட்டு செயல்பாட்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடியின் பார்வையில் பங்கு வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ஸ் கல்ப் ஜூனியர் கூறுகிறார்.
5 ஸ்டார் ஹோட்டலில் 2 ஆண்டுகள் தங்கிவிட்டு வாடகை கொடுக்காமல் தப்பிய நபர்!
"F414 எஞ்ஜின்கள் இரு நாடுகளுக்கும் முக்கியமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நன்மைகளை வழங்கும். கடற்படையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக உயர்தரமான இயந்திரங்களை உற்பத்தி செய்ய நாங்கள் உதவுகிறோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் அதிக பங்கு வகிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, இந்தியாவில் ஜெட் எஞ்சின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனம் வழங்க உள்ளது.
1986ஆம் ஆண்டில், F404 இன்ஜின்களுடன் கூடிய இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தை (எல்சிஏ) மேம்படுத்துவதற்கு ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவற்றுடன் ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனம் பணியாற்றத் தொடங்கியது.
சாக்கு போக்கு சொல்லாதீங்க அரவிந்த் கெஜ்ரிவால்; ஆம் ஆத்மி மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்!!
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் உலக அளவில் 1,600 க்கும் மேற்பட்ட F414 இன்ஜின்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்தியா இதுவரை தனது ராணுவ ஜெட் விமானங்களை ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பெற்றுவரும் நிலையில் அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
சமீபத்தில், போர் விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கியது. கூடுதலாக, மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) Mk2 எஞ்ஜின்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ஜென்ரல் எலக்ட்ரிக் பங்குகொள்கிறது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு பற்றிய பிடன் மற்றும் மோடியின் பார்வையை முன்னேற்றுவதில் நாங்கள் பங்களிப்பதில் பெருமை கொள்கிறோம். எங்களின் F414 இன்ஜின்கள் ஒப்பிட முடியாதவை மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு பலன்களை வழங்கும், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இராணுவ கடற்படையின் தேவைகளை பூர்த்தி செய்ய மிக உயர்ந்த தரமான இயந்திரங்களை உற்பத்தி செய்ய உதவுகிறோம்" என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!