மருத்துவமனைகளில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. கோவிட் பாதிப்பு அதிகரிப்பால் அமெரிக்கா நடவடிக்கை..

அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.

US Makes Mask Mandatory in Some Hospitals Amid Spike in Covid Cases Rya

அமெரிக்காவில் கோவிட் பெருந்தொற்று, பருவகால காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயாமாக்கி உள்ளன.  நியூயார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகர சுகாதார ஆணையர் டாக்டர். அஷ்வின் வாசன் இதுகுறித்து பேசிய போது “  நகரின் 11 பொது மருத்துவமனைகள், 30 சுகாதார மையங்கள் மற்றும் ஐந்து நீண்ட கால பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றில் மீண்டும் முகக்கவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒமிக்ரான் அலையைப் பார்த்தபோது, ​​மிகப் பெரிய பிரச்சினைகள் மக்கள் நோய்வாய்ப்பட்டது மட்டுமல்ல, எங்களிடம் நிறைய முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் இப்போது இல்லை.. எனவே தற்போது சுகாதார பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.” என்று தெரிவித்தார்.

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் இவை தான்..

அமெரிக்காவில் கோவிட்: சில முக்கிய தகவல்கள் :

  • டிச. 17-23 வரை அமெரிக்கா முழுவதும் கோவிட் நோயால் 29,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது முந்தைய வாரத்தை விட 16% அதிகமாகும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தரவுகள் தெரிவிக்கின்றன
  • அதே காலகட்டத்தில் 14,700 க்கும் மேற்பட்ட காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
  • 1.1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட் நோயால் இறந்துள்ளனர், CDC புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, இது மற்ற பணக்கார நாடுகளை விட அதிக விகிதம்.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி ஜோ பிடனின் நிறுவனங்களுக்கான கூட்டாட்சி தடுப்பூசி அல்லது சோதனை ஆணையை நிராகரித்தது, மேலும் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணியும் விதியும் நீக்கப்பட்டது
  • முகக்கவசம் அணிந்தவர்களிடையே ஆழ்ந்த அதிருப்தி இருந்தது. மேலும் முகக்கவசம் இல்லாதவர்களால் தங்கள் உடல்நலம் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தனர்.
  • இந்த சூழலில் சிகாகோவில் உள்ள ரஷ் பல்கலைக்கழக மருத்துவ அமைப்பு செவ்வாயன்று "நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்தின் சில பகுதிகளில் மருத்துவமனை-அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ காத்திருப்பு பகுதிகள் மற்றும் நோயாளி பதிவு ஆகிய இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய உணவு உலகின் மிக மோசமான உணவு பட்டியலில் உள்ளது...எது தெரியுமா..??

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios