பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பாலியல் சுரண்டல்கள் அதிகரிக்கும்..!! யுனஸ்கோ நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி..!!

54 கோடி மாணவர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் , தெரிவித்துள்ளார்.    இதில் 74 கோடி பேர் மாணவிகள் என்றும் இவர்களின் 11 கோடி பெண் குழந்தைகள் ,  குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.  

unasco release some statistics about school students and education

கொரோனாவால்  உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்களின்  கல்வி தடை பட்டுள்ளதாக யுனஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது . கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  120க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசுக்கு  பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்தை எட்டியுள்ளது  , உலக அளவில்  சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் யுனஸ்கோ  கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக அளவில்  பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது ,  ஒவ்வொரு ஆய்வின் முடிவுகளையும் அந்த நிறுவனம் தற்போது  வெளயிட்டு வருகிறது . 

unasco release some statistics about school students and education

அதில்,  உலக அளவில் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்த புள்ளி விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது ,  அதன் அடிப்படையில் உலக அளவில் சுமார் 154 கோடி மாணவர்கள் கல்வியின்றி  தவிப்பதாகவும் குறிப்பாக பெண் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  தெரிவித்துள்ளது .  தற்போது ஏற்பட்டுள்ள சூழல் மாணவர்களின் இடைநிற்றலுக்கு  வழிவகுக்கும் என்றும்,   பாலின இடைவெளியும் அதிகரிக்கும்  என்றும்  பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. 

unasco release some statistics about school students and education

இளம் வயதிலேயே கட்டாய திருமணம் என்ற நிலைக்கு இது இட்டுச் செல்லும் என்று அதன் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது .  இதுகுறித்து யுனெஸ்கோவின் உதவி இயக்குனர் ஜெனரல்  இஸ்டெபனியா கியானினி  தெரிவிக்கையில் ,  கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உலகெங்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன,  இதனால் 89 சதவீத மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர் ,  இந்த சதவீதம் பள்ளிகளுக்கு செல்லம் 154 கோடி மாணவர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் , தெரிவித்துள்ளார்.    இதில் 74 கோடி பேர் மாணவிகள் என்றும் இவர்களின் 11 கோடி பெண் குழந்தைகள் ,  குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

unasco release some statistics about school students and education 

இந்த நாடுகளில் கல்வி பெறுவதே மிகப்பெரிய போராட்டமாக இருந்து வரும் நிலையில்,   பள்ளிகள் திறக்கப்பட்டாலும்  பெண் குழந்தைகள் பலர் பள்ளிக்கு மீண்டும் வருவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது .  பலர் வர மாட்டார்கள் இது மிகப்பெரிய இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் இதே நிலை நீடித்தால் உலக அளவில் கல்விக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios