ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அய்ன் ஸ்னோஸி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்துள்ளது. பேருந்து வளைவான சாலையில் வேகமாக சென்றிக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து, பேருந்து பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்து தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு படை வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்து விபத்தில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.