இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்ய டொனால்ட் டிரம்ப் இலக்கு; மேலும் பல டரம்ப் கோபுரங்கள் வரலாம்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெரிய முதலீடு செய்யத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் முதலீடு செய்யப்படும். மேலும் பல டிரம்ப் டவர்ஸ் இந்தியாவில் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

Trump Towers to Increase in India with Rs. 15,000 Crore Investment Rya

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் கூடுதல் முதலீடு செய்ய டிரம்பின் நிறுவனம் தயாராக உள்ளது. ரூ.15,000 கோடி திரட்டும் நோக்கில், இந்தியாவில் டிரம்ப் டவர்ஸ் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க டிரம்பின் மகன்கள் விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் எவ்வாறு ஒத்துழைப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பதவியேற்பு விழாவிற்கு நரேந்திர மோடியை டிரம்ப் அழைக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியது. எனினும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியுடன், டிரம்ப் நிறுவனத்தின் இந்திய ரியல் எஸ்டேட் கூட்டாளியான கல்பேஷ் மேத்தாவும் அமெரிக்க விழாவில் கலந்துகொண்டார்.

47வது அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்! தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம்!

குருகிராம், புனே, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தற்போது டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போதைய திட்டங்களில் இருந்து ரூ.7,000 கோடி திரட்ட டிரம்ப் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. மேலும் எட்டு டிரம்ப் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்க டிரம்பின் மகன்களான எரிக் டிரம்ப், டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப் ஜூனியரின் சக மாணவரான கல்பேஷ் மேத்தாவுடன் இந்த விஷயத்தைப் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WHO மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தில் வெளியேறியது அமெரிக்கா; சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்!!

தற்போதுள்ள நகரங்களுக்கு மேலாக நொய்டா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் டிரம்ப் டவர்ஸ் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலம் ரூ.15,000 கோடி திரட்ட முடியும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. முதல் டிரம்ப் அரசாங்கத்தின் காலத்தில், டிரம்ப் நிறுவனத்தின் திட்டங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios