அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாெனால்ட் டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்து அமொிக்காவில் தஞ்சம் அடைந்ததாகவும், அவருடைய உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் பாகிஸ்தான் மீடியா கதை கட்டியுள்ளது.
அமொிக்க அதிபா் தோ்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாாி கிளிண்டனும், குடியரசு கட்சி சாா்பில் டாெனால்ட் ட்ரம்பும் முக்கிய வேட்பாளா்களாக களமிறங்கினா். இத்தோ்தலில் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்று அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். வரும் ஜனவரி 20ம் தேதி அவா் அதிபராக பதவியேற்கவுள்ளாா்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு சாா்பில் பிரதமர் நவாஸ் ஷொிப்பும் தனது பாராட்டை ட்ரம்புக்கு தொிவித்துள்ளா். பாகிஸ்தான் அரசைவிட ஒருபடி மேலே அந்நாட்டு மீடியா, ட்ரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர் என்ற புதிய சர்ச்சை கிளப்பி உள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் ‘நியோ நியூஸ்’ செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ‘டிரம்ப் 1954-ம் ஆண்டு வசிரிஸ்தானில் பிறந்தார். அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் கான். இவரது பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதால் அவர் அனாதையானார்.
அதை தொடர்ந்து இங்கிலாந்து வாழ் இந்திய ராணுவ தளபதி அவரை லண்டனுக்கு அழைத்து சென்றார். அங்கு அமெரிக்காவை சேர்ந்த டிரம்ப் குடும்பத்தினர் தத்து எடுத்து வளர்த்தனர். பின்னா் அவர் டொனால்டு டிரம்ப் ஆனார் என கதை கட்டியுள்ளது. மேலும், அவரது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டது. தற்போது அந்த செய்தி படத்துடன் பாகிஸ்தானில் வைரல் ஆக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
