Asianet News TamilAsianet News Tamil

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்! சாவதற்கு முன் சொன்னதால் BMW காரை சவப்பெட்டியாக்கி அடக்கம்!

The Ultimate Burial Machine Nigerian Man Inters Father in Promised BMW
The Ultimate Burial Machine: Nigerian Man Inters Father in Promised BMW
Author
First Published Jun 14, 2018, 12:43 PM IST


தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் BMW காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நைஜீரியாவில் மகன் ஒருவர் தனது தந்தை மரணத்திற்கு பிறகு அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது, நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி. தந்தை மரணம் இவர் அந்தப்பகுதியில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். இவரது தந்தை அண்மையில் மரணமடைந்தார்.

BMW காருடன் அடக்கம் இதைத்தொடர்ந்து தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக அசுபுயுகி புதிய BMW கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி தனது தந்தையின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்தார். ரூ.66 லட்சம் மதிப்பு இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (அடக்கம் செய்யப் பயன்படுத்திய BMW காரின் மதிப்பு 66,000 டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.66 லட்சம்) 

தந்தையின் ஆசையை  நிறைவேற்ற உடலை புதிய BMW காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அசுபுயுகியின் தந்தை முன்னரே கூறியிருந்தாராம். அதேபோல தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும்  கூறியுள்ளார். BMW கார் சவப்பெட்டி BMW கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios