அதற்குள் இரண்டாவது தடுப்பூசியா..!! ரஷ்யா அதிரடிமேல் அதிரடி..!!

இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்புகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. அதில் ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது, சீனாவும் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்துள்ளது.

The second vaccine before that, Russia Action on Action

ஏற்கனவே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு தடுப்பூசி தயாராக உள்ளதாக அந்நாடு கூறியுள்ளது. இந்த தகவல் உலக அளவில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில் 2.31கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  8.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 1.57 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  66 லட்சம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில்   61, 838 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளவில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் அது கட்டுக்குள் வரவில்லை. எனவே பிரத்தியேக தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 

The second vaccine before that, Russia Action on Action

இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்புகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. அதில் ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது, சீனாவும் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்து உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். தடுப்பூசி விவகாரத்தில் அவசரப்படக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மேலும் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 

The second vaccine before that, Russia Action on Action

வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படும் ரஷ்ய அரசின் வைராலஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்குவதாகவும், மேலும் இதை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான மருந்து பரிசோதனை இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது, அதில் முதற்கட்டத்தில் 14 பேரும், இரண்டாவது கட்டத்தில் 43 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாகவும், சுகாராத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை முழுவதுமாக வெற்றியடையும் பட்சத்தில், கூடிய விரைவில் 2 வது தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios