மீடியாக்கள் இல்லையென்றால் கொரோனா வெறும் காய்ச்சல் சளியாக மட்டுமே இருந்திருக்கும். என்னுடைய மகனுக்கு கொடோனா தொற்று இருந்தது. பாரம்பரிய முறைப்படி இஞ்சி மற்றும் எலும்பிச்சம்பழத்தின் சாறுகளை கொடுத்து வந்தோம். அது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இன்று என்மகன் கொரோனா தொற்று இல்லாதவனாக விளையாடிக்கொண்டிருக்கிறான். ஒன்றுமே இல்லாத இந்தக் கிருமிக்கு இவ்வளவு பில்டப் ஏன் என தான்சானியா அதிபர் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உண்மையில் நடந்தது என்ன? தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தி விட்டோம் எங்களிடம் கொரோனா வைரஸை கண்டறிவதற்கான அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளது என்று சீனா கூறியது. இதனை நம்பி பல நாடுகள், வரிசையில் சென்று போட்டி போட்டு, கொண்டு சீனாவிடம்  இருந்து மருத்துவ, உபகரணங்களை ஆர்டர் செய்து, வாங்கியுள்ளனர்.

சீன கருவிகள் 30 சதவீத அளவிற்கே முடிவை தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த மருத்துவ  கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்நிலையில் தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி சீன மருத்து உபகரணங்கள் உண்மையா அல்லது போலியா என்பதனை அறிய ஆட்டின் ரத்ததிற்கு ஒரு பெயரும் பப்பாளி பழத்திற்கு ‘எலிசபெத் அனே’என்று பெயரிட்டு அந்த இரண்டு மாதிரிகளையும், அந்நாட்டின் தேசிய மருத்துவ ஆய்வகத்திற்கு, அனுப்பி வைக்குமாறு ரகசிய உத்தரவு ஒன்றினை தனது அதிகாரிகளுக்கு கூறியிருந்தார் அதிபர்.

முடிவில்  பப்பாளி பழத்திற்கு கொரோனா  உள்ளது என்றும் ஆட்டிற்கு கொரோனா இல்லை என்றும் முடிவுகள் கூறியது. மே 3 அன்று, தான்சானியாவின் அதிபர் ஜான் மகுஃபுலி, இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் தவறானவை மற்றும் நம்பமுடியாதவை என்று  தெரிவித்துள்ளார். பப்பாளி பழத்திற்கு கொரோனா தவறான முடிவை காட்டிய சீன மருத்துவ உபகரணத்துக்கு அவர் கண்டணம் தெரிவித்துள்ளார். 

அவர் மீடியாக்களை குறை சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. மீடியாக்கள் கொரோனா அப்டேட் தருகிறோம் என்கிற பெயரில் அந்த நோயை கொடூரமாக சித்தரித்து மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. ஒரு விதத்தில் மக்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது. தான்சானியா அதிபர் சொன்னது போல மீடியாக்கள் மட்டும் இல்லையென்றால் கொரோனா வெறும் சளி, காய்ச்சலாக மட்டுமே இருந்திருக்கக்கூடும்.