தென் கொரியா விரைவில் பூமியில் இருந்து காணாமல் போகும் முதல் நாடாக மாறும்; ஏன் தெரியுமா?
தென் கொரியா வரலாறு காணாத மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது, இதன் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, இப்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஆம்.. தென் கொரியாவின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது, இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள்தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனையை தீவிரமாக பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1960-களில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியபோது தான் இந்தப் பிரச்சனை தொடங்கியது. அந்த நேரத்தில், தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகளாக இருந்தது, அதே நேரத்தில் அதன் தனிநபர் வருமானம் உலக சராசரியில் 20% மட்டுமே.
இந்தியர்களுக்கு எளிதாக வேலை விசா வழங்கும் 7 நாடுகள்! அதுவும் பல சலுகைகளுடன்!
1983 வாக்கில், கருவுறுதல் விகிதம் 2.1 என்ற அளவில் குறைந்தது., ஆனால் அதன் பிறகு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இன்று, கருவுறுதல் விகிதம் உலகளவில் மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளது.
எனினும் தென் கொரிய அரசாங்கம் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கான இராணுவ சேவை ஆகியவையும் அடங்கும்.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இன்னும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பல தென் கொரிய பெண்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில், வீட்டை பார்த்துக் கொள்வதை வேலை செல்லவே விரும்புகின்றனர். 2023 ஆம் ஆண்டு அரசாங்க கருத்துக்கணிப்பு, பெற்றோரின் சவால்கள் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதாக வெளிப்படுத்தியது.
சமூக அணுகுமுறைகளும் மாறி வருகின்றன. கடந்த தசாப்தத்தில் திருமணமாகாத பெற்றோரின் எண்ணிக்கை 22% இலிருந்து 35% ஆக உயர்ந்துள்ளது, ஆனால் 2.5% குழந்தைகள் மட்டுமே திருமணத்திற்கு வெளியே பிறக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கண்டறிந்துள்ளனர், 93% பேர் வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு சுமைகளை காரணம் காட்டுகின்றனர்.
பெட்ரோல் வெறும் 40 ரூபாய்... இந்தியர்களுக்கு ராஜ மரியாதை! எங்கே தெரியுமா?
கிராமப்புறங்களில், ஆண்கள் தங்கள் துணையை கண்டுபிடிக்க போராடுகிறார்கள், "திருமண இடம்பெயர்வு" அதிகரித்து வருகிறது. பல தென் கொரிய ஆண்கள் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். தென் கொரியாவின் பிறப்பு விகிதம் குறைவது ஒரு மக்கள்தொகை பிரச்சினை மட்டுமல்ல, பாலின சமத்துவமின்மை மற்றும் மாறிவரும் குடும்ப இயக்கவியல் உள்ளிட்ட ஆழமான சமூக சவால்களின் பிரதிபலிப்பாகும். இதே நிலை தொடர்ந்து விரைவிலேயே தென் கொரியா பூமியில் இருந்து மறையும் முதல் நாடாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றன