texas: racism 'எங்கு பார்த்தாலும் இந்தியர்கள், திரும்பிப்போங்க' : அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்கு
அமெரிக்காவில் 4 இந்தியப் பெண்களிடம் இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் 4 இந்தியப் பெண்களிடம் இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் வந்துவிட்டீர்கள், உங்கள் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என இந்தியப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய மெக்சிக்கோவைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் பெண் கைது செய்யப்பட்டார்.
யாருயா நீ! உலகிலேயே முதல்முறை! ஒரே நேரத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை, கொரோனா, ஹெச்ஐவி தொற்று
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் புதன்கிழமை இரவு கார் பார்க்கிங் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியப் பெண்களிடம் இனவெறியுடன் நடந்து கொண்டு தாக்குதல் நடத்திய மெக்சிக்க அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்திய பெண் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்ட இந்திய பெண்ணின் தாயாரும் அவருடன் சேர்ந்து 3 இந்தியர்களும் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கார் பார்க்கிங் பகுதியில் இந்தியப் பெண்களைப் பார்த்த மெக்சிக்கோ அமெரிக்க வாழ் பெண், இந்தியர்களிடம் இனவெறியுடனும், மிகவும் மோசமான வார்த்தைகளையும் பேசி திட்டினார்.
இலங்கை அரசு தடை ! சாக்லேட், ஷாம்பு, பெர்பியூம் உள்பட 300 வகை பொருட்கள் இறக்குமதிக்கு ‘நோ’
அந்த மெக்சிக்கோ பெண் வீடியோவில் பேசுகையில் “ இந்தியர்களை நான் வெறுக்கிறேன். நல்ல சுகமான வாழ்க்கைக்காக இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வந்துவிட்டீர்கள். எங்கு நான்சென்றாலும் இந்தியர்கள் இருக்கிறீர்கள்.
இந்தியாவில் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றால் எதற்காக அமெரிக்காவுக்கு வந்தீர்கள். இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்” எனக் கோபமாகத் தெரிவித்தார்.
அதற்கு இந்தியப் பெண் பதிலுக்கு பேசுகையில் “ நீங்கள் மெக்சிகோவைச் சேர்ந்தவர்தானே, நீங்கள் அமெரிக்கா் இல்லையே” என்றார்.
அதற்கு அந்த அமெரிக்க பெண், “ நான் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர்தான், இருப்பினும் அமெரி்க்காவில் பிறந்தவள்” என்று கோபமாகத் தெரிவித்தார்
அந்த அமெரிக்கப் பெண்ணின் ஆக்ரோஷமான பேச்சை வீடியோ எடுத்த இந்திய பெண்ணிடம் சென்று திடீரென தாக்கினார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்கவே அந்த அமெரி்க்கப் பெண் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீஸார் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்பே அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றயபின் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களிடையே பெரும் வைரலானது. இந்த வீடியோப் பார்த்த அமெரிக்க இந்தியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இலங்கை அரசு தடை ! சாக்லேட், ஷாம்பு, பெர்பியூம் உள்பட 300 வகை பொருட்கள் இறக்குமதிக்கு ‘நோ’
இது குறித்து பிளானோ போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் எஸ்மெரலடா அப்டன் என்பதும் பிளானோவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்மெரலடாவை கைது செய்த போலீஸார், உடலில் காயத்தை ஏற்படுத்தியது, மிரட்டல்விடுத்தது ஆகிய பிரிவில் வழக்குப்பதிவுசெய்து 10ஆயிரம் அமெரி்க்க டாலர் அபராதம் விதித்தனர்.
ஆனால், எஸ்மெரலாடாவுக்கு அபராதம் விதித்தது போதாது. அவரிடம் துப்பாக்கி இருந்துள்ளது, இந்தியர்கள் சுடுவதற்கு அவர் தயாராகினார். இதுபோன்ற பெண்களை இனவெறிக் குற்றத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்