terrorist attack at Iran parliment ...seven people killed

ஈரான் பார்லிமென்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்…7 பேர் பலி..ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…

ஈரான் பார்லிமென்டில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பார்லிமென்ட் உள்ளிட்ட 2 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

ஈரான் பார்லிமென்ட் வளாகத்திற்குள் இன்று புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பர்ர்லிமென்ட்டில் இருந்த சிலரை தீவிரகாதிகள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவரிடம், ஒரு பிஸ்டல், 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதே போன்று பார்லிமென்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரானிய புரட்சியாளர் ருஹோல்லா கொமெனி சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர் சராமரியாக தாக்குதல் நடத்தினார்.

இதிலும் பலர் காயமடைந்துள்ளனர். மர்ம நபர், தற்கொலை படையை சேர்ந்த பெண் பயங்கரவாதியாக இருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்குபாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஈரானில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.