தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி தாக்குதல்... 19 பேர் உயிரிழப்பு...!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டை மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Taliban attack... 19 people kills

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டை மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட தொடங்கினர். இது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தனர். Taliban attack... 19 people kills

பின்னர் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 9 பேரும், தலிபான் தீவிரவாதிகள் 10 பேர் உயிரிழந்தனர். Taliban attack... 19 people kills

இதில் தலிபான் இயக்கத்தின் தளபதி முல்லா கவுசூதிங்கும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 15 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து. அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios