சிரிய தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் அசாத்!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷர் அல்-அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை கிளர்ச்சியாளர்களிடம் அமைதியான முறையில் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக ரஷ்யா உறுதிப்படுத்துகிறது.

Syria President Bashar al-Assad left the country after rebellions capture Damascus sgb

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டமாஸ்கஸை முழுமையாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவித்தனர்.

சிரியாவின் அதிபர் பதவியில் இருந்து பஷார் அல்-அசாத் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட இருதரப்பினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அசாத் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வெளியேறுவதற்கு முன் அதிகாரத்தை அமைதியான முறையில் கிளர்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் ஆஸாத் ஒப்புக்கொண்டார் என ரஷ்யா சொல்கிறது.

சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய துருப்புக்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை, அங்குள்ள ரஷ்யாவின் ராணுவத் தளங்களின் பாதுகாப்பிற்கு தீவிரமான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

வன்முறையைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளையும் அரசியல் வழிமுறைகளால் தீர்க்க வேண்டும் என சிரியாவின் எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகிலேயே பணக்கார மருமகன்! ராஜ மரியாதையுடன் சொகுசாக வாழும் அமித் பாட்டியா!

தப்பியோடிய அதிபர் அசாத்:

தலைநகர் டமாஸ்கஸைத் தாக்கிய பின்னர், அதிபர் அசாத் தலைநகரை விட்டுத் தப்பிச் சென்றதாகவும் நாடு விடுதலை பெற்றுவிட்டதாகவும் கிளிர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (1900 GMT) புறப்பட்ட தனிப்பட்ட விமானத்தில் அசாத் தப்பிச் சென்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் எங்கு செல்கிறார் என்று குறிப்பிடவில்லை என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது .

சாத் பயணித்த விமானம் ஹோம்ஸ் நகருக்கு அருகே உள்ள ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு, திடீரென பாதையைத் திருப்பி, எதிர்திசையில் பறந்துது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அசாத் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்புகளும் உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2015 முதல் சிரியாவுடன் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்களுடன் சண்டையிடவும், அவர்கள் வசம் உள்ள பகுதிகளில் சிரிய அரசின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் ஈரானுடன் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டுள்ளது.

அதிபர் அசாத் நாட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினர். நாடு முழுவதும் உள்ள அசாத் குடும்பத்தின் சிலைகளை மக்கள் தகர்த்து அகற்றியுள்ளனர்.

சிரியாவில் 50 ஆண்டுகளாக ஆட்சி அசாத் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) குழுவின் தாக்குதல், அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. 13 வருட மிருகத்தனமான போருக்குப் பிறகு, ஆஸாத் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பஷர் அல்-அசாத்:

பஷர் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் அவரது தந்தை ஹபீஸ் அல்-அசாத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவை ஆட்சி செய்துள்ளார். இதற்கு முன்பாக பஷார் அல்-அசாத்தின் தந்தையின் இரும்புப் பிடி ஆட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பல அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டன.

2011ஆம் ஆண்டு தனது ஆட்சிக்கு எதிராக எழுந்த போராட்டத்தை அசாத் கையாண்ட விதம் பேரழிவுகளை உண்டாக்கும் உள்நாட்டுப் போராக மாறியது. இந்த உள்நாட்டுப் போரில் 5 லட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளன. 60 லட்சத்துக்கும் மேலான மக்கள் அகதிகளாகியுள்ளனர். எண்ணற்ற மக்கள் உள்நாட்டிலேயே தங்கள் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

பாத்ரூமில் வைத்து ஹார்ட் அட்டாக் வருவது ஏன்? அவசர உதவி பெறுவது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios