MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உலகிலேயே பணக்கார மருமகன்! ராஜ மரியாதையுடன் சொகுசாக வாழும் அமித் பாட்டியா!

உலகிலேயே பணக்கார மருமகன்! ராஜ மரியாதையுடன் சொகுசாக வாழும் அமித் பாட்டியா!

Amit Bhatia: உலகின் பணக்கார மருமகன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் மருமகனாக மாறியவரைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.  Amit Bhatia, world's richest son-in-law from Lakshmi Niwas Mittal family

2 Min read
SG Balan
Published : Dec 08 2024, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Amit Bhatia Net Worth

Amit Bhatia Net Worth

பல இந்திய குடும்பங்களில் மருமகனுக்கு ஸ்பெஷல் மரியாதை கிடைக்கும். குறிப்பாக ஒரு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளும்போது கேட்கவே வேண்டியதில்லை. உலகின் பணக்கார மருமகன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் மருமகனாக மாறியவரைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

28
Amit Bhatia with his children

Amit Bhatia with his children

அமித் பாட்டியா ஒரு பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபர். இவர்தான் தொழிலதிபர் லட்சுமி நிவாஸ் மிட்டலின் மருமகன். அவ்பே கேபிடல் (Ayebay) Capital என்ற நிறுவனத்தை தொடங்கியவர். அதன் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இந்நிறுவனம் முதலில் ஸ்வாட்ஃபிஷ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Swordfish Investment) என்ற பெயரில் செயல்பட்டது.

38
Vanisha Mittal Lakshmi Mittal

Vanisha Mittal Lakshmi Mittal

அமித் தனது ஆரம்பக் கல்வியை டெல்லியில் முடித்தார். உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அமித் நியூயார்க்கில் மெரில் லிஞ்ச் மற்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனங்களில் தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். 45 வயதில், அவர் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் (QPR) FC இன் இணை உரிமையாளரானார். இது மேற்கு லண்டனில் உள்ள கால்பந்து கிளப் ஆகும்.

48
Amit Bhatia wife Vanisha Mittal

Amit Bhatia wife Vanisha Mittal

அமித் பாட்டியாவின் வணிக முயற்சிகள் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் சார்ந்தவை. சம்மிக்ஸ் கேபிட்டலின் நிறுவன பங்குதாரராகவும் உள்ளார். ஹோப் கன்ஸ்ட்ரக்ஷன் மெட்டீரியல்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 2016 இல் ப்ரீடன் குழுமத்தால் கையகப்படுத்தப்படும் வரை அதன் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார்.

58
Amit Bhatia Career

Amit Bhatia Career

கார்ப்பரேட் ஃபைனான்ஸ் மற்றும் பிரைவேட் ஈக்விட்டியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், அமித் பாட்டியா ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கியுள்ளார். 2004 இல், அவர் லட்சுமி நிவாஸ் மிட்டலின் மகள் வனிஷா மிட்டலை மணந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற அவர்கள் திருமணத்திற்கு ஆன செலவு ரூ. 240 கோடி ரூபாய். அது அந்த காலத்தில் உலகின் மிக ஆடம்பரமான திருமணமாக கருதப்பட்டது.

68
Vanisha Mittal - Amit Bhatia Wedding

Vanisha Mittal - Amit Bhatia Wedding

லட்சுமி மிட்டல் தனது மகள் மற்றும் மருமகன் திருமணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற விரும்பினார். அதற்காக அமித் பாட்டியா மற்றும் வனிஷா மிட்டல் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஆறு நாள் திருமணக் கொண்டாட்டத்தைக் கோலாகலமாக ஏற்பாடு செய்தார்.

78
Amit Bhatia Family

Amit Bhatia Family

பாரிஸ் நகரம் முழுவதும் விழாவைக் கொண்டாடுவது போல் உணரும் வகையில் ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன. புகழ்பெற்ற சமையல் கலைஞர் முன்னா மகராஜ், இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். திருமணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 10,000 விருந்தினர்கள் பங்கேற்றனர். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் அணிவகுப்பால் திருமணம் களைகட்டியது. சர்வதேச பாப் பாடகர் கைலி மினாக் திருமணக் கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக அவருக்குக் கொடுத்த சம்பளம் ஒரு மணிநேரத்துக்கு ஒரு கோடி ரூபாய்.

 

88
Vanisha Mittal - Amit Bhatia

Vanisha Mittal - Amit Bhatia

வனிஷா மிட்டல் மற்றும் அவரது கணவர் அமித் பாட்டியா ஆகியோருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், ஆனால் அவர்களின் பெயர்கள் இதுவரை பொதுவெளியில் வெளியானதில்லை. அமித்தின் மாமனார் லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 19.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மிட்டல் மூன்றாவது இடத்தைப் பெற்றார். 2015ஆம் ஆண்டில், தி சண்டே டைம்ஸ் அவரை ஆண்டின் சிறந்த பிசினஸ்மேனாக அறிவித்தது. டைம் இதழ் அவரை டைம் 100 பட்டியலில் சேர்த்திருக்கிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved