MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • பாத்ரூமில் வைத்து ஹார்ட் அட்டாக் வருவது ஏன்? அவசர உதவி பெறுவது எப்படி?

பாத்ரூமில் வைத்து ஹார்ட் அட்டாக் வருவது ஏன்? அவசர உதவி பெறுவது எப்படி?

Heart Attacks in the Bathroom: எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றாலும், குளியலறை ஆபத்தான இடமாக உள்ளது. கழிப்பறை அல்லது குளியலறையில் சில தினசரி செயல்பாடுகள் மாரடைப்பைத் தூண்டுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2 Min read
SG Balan
Published : Dec 08 2024, 06:01 PM IST| Updated : Dec 08 2024, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Heart Attacks in the Bathroom

Heart Attacks in the Bathroom

எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றாலும், குளியலறை ஆபத்தான இடமாக உள்ளது. கழிப்பறை அல்லது குளியலறையில் சில தினசரி செயல்பாடுகள் மாரடைப்பைத் தூண்டுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர். குளியலறையில் இதுபோன்ற நிலை ஏற்படும்போது, மூடிய, குறுகலான இடமா இருப்பதால் அவசர உதவி பெறுவது தாமதமாகலாம்.

28
Heart Attacks Risks

Heart Attacks Risks

குளியலறையில் ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது? மாரடைப்பு ஏற்பட்டால், ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் உங்கள் இதயத்தில் மின் கோளாறு ஏற்படத் தொடங்குகிறது. நீங்கள் குளிக்கும்போது அல்லது கழிப்பறையில் இருக்கும்போது உடலில் ஏற்படக்கூடிய அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படலாம்.

38
Bathroom Heart Attacks

Bathroom Heart Attacks

கழிப்பறையில் உட்கார்ந்திருக்கும்போது, மலம் கழிப்பதற்கு கஷ்டப்படுத்தி அழுத்தம் கொடுத்தால், அது உங்கள் இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் உங்கள் இதயம் ஏற்கனவே பலவீனமாக இருந்தால், இது திடீர் மாரடைப்பு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

48
Heart Attacks while Bathing

Heart Attacks while Bathing

பாத்ரூம் செயல்பாடுகளால் ஏற்படும் மாரடைப்பு வாஸோவாகல் ரெஸ்பான்சஸ் (vasovagal responses) என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் வேகஸ் நரம்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் மூலம் இதயத் துடிப்பு குறைக்கிறது.

58
Heart Attacks Precautions

Heart Attacks Precautions

மிகவும் குளிராகவோ அல்லது சூடாகவோ இருக்கும் நீரில் குளிப்பது உங்கள் இதயத் துடிப்பை பாதிக்கிறது. இது உங்கள் இதயத்தில் தமனிகள் மற்றும் நுண்குழாய்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற வகையான இதய நோய்கள் ஏற்படவும் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

68
Heart Attacks Symptoms

Heart Attacks Symptoms

ஒரு சில அரிதான சந்தர்ப்பங்களில், அதிகப்படியான அளவு மருந்து எடுத்துக்கொண்டாலும் திடீரென மாரடைப்பு ஏற்படும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் குளியலறையில் இருக்கும்போது நெஞ்சு வலி, திடீர் மூச்சுத் திணறல், மயக்கம், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

78
Heart Attacks Reasons

Heart Attacks Reasons

நீங்கள் ஒரு இதய நோயாளியாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் குளியலறையில் இருந்தால், வந்து பார்த்துக்கொள்ளும்படி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் தெரிவிக்கலாம். அவர்கள் கதவைத் தட்டும்போது, நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவசர உதவி தேவைப்படுவதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

88
Heart Attacks Tips

Heart Attacks Tips

உங்கள் மார்புக்கு மேல் சூடான நீரில் குளிக்காதீர்கள். குளியல் தொட்டியில் இருக்கும்போது டைமர் அல்லது அலாரத்தை அமைக்கவும். தூக்கத்துக்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு மிகவும் வெந்நீரில் குளிக்க வேண்டாம். குளியலறையில் இருக்கும்போது எப்போதும் உங்கள் மொபைலை கவுண்டரில் வைத்திருக்கவும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved