Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

Sri lanka President Gotabaya Rajapaksa to resign on July 13 says Speaker

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Sri lanka President Gotabaya Rajapaksa to resign on July 13 says Speaker

மேலும் செய்திகளுக்கு.. Sri lanka : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா..தொடரும் போராட்டம் !

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலின் எதிரொலியாக, அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.  மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

Sri lanka President Gotabaya Rajapaksa to resign on July 13 says Speaker

மேலும் செய்திகளுக்கு.. கொளுந்து விட்டு எரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு.. போராட்டக்காரர்கள் தீ வைப்பு -வைரல் வீடியோ !

அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனா தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios