Asianet News TamilAsianet News Tamil

Sri lanka : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா..தொடரும் போராட்டம் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது.

Sri Lanka crisis Ranil Wickremesinghe resigns as Prime Minister
Author
First Published Jul 9, 2022, 9:02 PM IST

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களுக்கு கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியை தொலைத்து ஒவ்வொரு நாளும் இன்னல் பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கொழும்புவில் எதிர்க்கட்சிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Sri Lanka crisis Ranil Wickremesinghe resigns as Prime Minister

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

இதைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை அதிபருக்கு எதிராக அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் ஏறி வலம் வந்தனர். 

கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்

Sri Lanka crisis Ranil Wickremesinghe resigns as Prime Minister

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும், தற்காலிக அதிபராக சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும், அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும், விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளதாக பிரதமர் மாளிகை தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த தகவலை ரணில் விக்ரமசிங்கேவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். தற்போதைய அரசு தொடரவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. நடிகையை ஏமாற்றிய புகார்.. எஸ்கேப் ஆன முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்.!

Follow Us:
Download App:
  • android
  • ios