Asianet News TamilAsianet News Tamil

கொளுந்து விட்டு எரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு.. போராட்டக்காரர்கள் தீ வைப்பு -வைரல் வீடியோ !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

Sri lanka crisis protesters have set fire to Prime Minister Ranil Wickremesinghe residence viral video
Author
First Published Jul 9, 2022, 10:23 PM IST

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இரு மாதங்களுக்கு முன் பதவியேற்றார். 

Sri lanka crisis protesters have set fire to Prime Minister Ranil Wickremesinghe residence viral video

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால், ஆத்திரமும், ஏமாற்றமும் அடைந்த இலங்கை மக்கள், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அரசு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

Sri lanka crisis protesters have set fire to Prime Minister Ranil Wickremesinghe residence viral video

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், போராட்டக்காரர்கள் வந்து கொண்டே உள்ளனர்.போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !

மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்தார். அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு.. Sri lanka : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா..தொடரும் போராட்டம் !

Follow Us:
Download App:
  • android
  • ios