விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமானம் புறப்பட்ட சில மணி துளிகளில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

small plane crash... 10 people kills

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமானம் புறப்பட்ட சில மணி துளிகளில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 small plane crash... 10 people kills

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம் மேலே பறந்து கொண்டிருந்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதி தீப்பற்றியது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 small plane crash... 10 people kills

 இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios