"கால கீழ வைக்க முடியாது.. என்ன செய்வ".. மக்களுக்கு இடையூறு செய்த பெண்.. சிறப்பாக கவனித்த சிங்கப்பூர் போலீஸ்!
Singapore News : எவ்வளவு வளர்ந்த நாடக இருந்தாலும் அதில் உள்ள சிலர் செய்யும் வெறுக்கத்தக்க விஷயங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி தான் வருகின்றது. அந்த வகையில் தான் சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் நடந்துகொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் SBS பேருந்தின் பிடிமான கம்பியில் இருந்து கால்களை கீழே போட மறுத்த, 50 வயது பெண் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 26 அன்று மாலை 6.17 மணிக்கு, சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் நோக்கி பூன் லே வே வழியாக பேருந்தில் ஏற்பட்ட தகராறு குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
SBS பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த பெண் ஒருவர், முதலில் தனக்கு எதிரே இருந்த பேருந்து இருக்கையில் கால்களை உயர்த்தி வைத்து பயணித்துள்ளார். இதை கண்ட பேருந்து ஓட்டுநர் அந்த பெண்மணியிடம் சென்று பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை சுட்டிக்காட்டினார். அதாவது இது பஸ் இருக்கைகளில் ஒருவரின் கால்களை உயர்த்தி வைப்பது விதிகளுக்கு எதிரானது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ஓட்டுனரின் செயலுக்கு மதிப்பு கொடுக்காமல், அந்த பெண் பேருந்தில் இருந்த பிடிமான கம்பத்தில் கால்களை வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் கால்களை பிடிமான கம்பியில் வைத்ததோடு தனது முகத்தை தனது முகமூடியால் மூடிக்கொண்டு துங்கியுள்ளார். இறுதியில் பொறுமை இழந்த ஓட்டுநர் காவல்துறையை அழைத்துள்ளார்.
இதனால் அந்த பேருந்தில் இருந் எஞ்சிய பயணிகள், பேருந்தில் இருந்து இறங்கி மற்றொரு வண்டியில் பயணம் செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
SBS ட்ரான்சிட் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசியபோது, பொதுப் போக்குவரத்தில் மக்களின் இனிமையான பயணத்திற்கு ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். ஆகவே பயணிகள் "கருணை மற்றும் அக்கறையுடன்" இருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறினார். பேருந்து ஓட்டுநர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கடைப்பிடிக்க நிலையான இயக்க நடைமுறைகளைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இப்படி ஒரு நிலை ஏற்படும் போது, அந்த செயலை உடனடியாக நிறுத்துமாறு பயணிகளுக்கு முதலில் அறிவுறுத்துவார்கள். பயணிகள் ஒத்துழைக்க மறுத்தால், அவர்கள் எங்கள் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு சம்பவத்தை பற்றி புகாரளித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வழிகாட்டுதலைப் பெறுவார்கள். இதனால் சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக சக பயணங்களுக்கு தாமதத்தை ஏற்படுத்தும் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D