பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள்.. காசாவிற்கு உதவ ஒன்றிணைந்தனர் - அமைச்சர் சண்முகம் நெகிழ்ச்சி!
காஸாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான ரீதியாக ஆதரவை வழங்குவதற்காக, சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அடிமட்ட அமைப்புகள், மத அமைப்புகள், நல்லிணக்க அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய "நீ சூன் சமூகம்" நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
நேற்று அக்டோபர் 28, 2023 அன்று நீ சூன் சென்ட்ரல் கம்யூனிட்டி கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இணை அமைச்சர் முஹம்மது பைசல் இப்ராஹிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லூயிஸ் எங், டெரிக் கோ மற்றும் கேரி டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் சண்முகம், திரட்டப்படும் நிதி, ரஹ்மதன் லில் ஆலமின் அறக்கட்டளைக்கு (RLAF), ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, காஸாவில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி வழங்கும் என்று கூறினார். இதுவரை சுமார் S$30,000 திரட்டப்பட்டுள்ளது என்றும், RLAF நிதி திரட்டல் அக்டோபர் 31 அன்று முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் Nee Soon இயக்கமானது நவம்பர் 30, 2023 வரை தனது பணியை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணம் காசாவில் உள்ள மக்களுக்கான மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் பிற உதவிகளுக்குச் செல்லும். நீ சூன் நிறுவனத்தின் இந்த முயற்சியை போலவே, சிங்கப்பூரில் இருந்து, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் தன் பங்கிற்கு நிதி வசூல் செய்து வருகின்றது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் ஒன்று கூடி உதவுகிறார்கள்
அமைச்சர் சண்முகம் மேலும் பேசுகையில், வாரத்தின் தொடக்கத்தில் இந்த முயற்சியை ஆரம்பித்து, குறுகிய காலத்தில் வந்து தங்களால் இயன்றதை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பல சிங்கப்பூரர்கள் காசாவில் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட பல துன்பங்களைப் பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நிறைய இருந்தாலும் சரி, கொஞ்சம் இருந்தாலும் சரி, பங்களிப்போம் என்றார் அவர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் சீன கோவில்கள் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து உதவுகின்றன. இதுவே சிங்கப்பூரின் மனம் என்றும், இங்கு இனம், மதம் எதுவாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக மனிதநேய உணர்வோடு மக்கள் ஒன்று கூடுகிறார்கள் என்றார் அவர்.
காசாவில் இப்போதைக்கு போர்நிறுத்தம் கிடையாது... இஸ்ரேல் திட்டவட்டம்! பலி எண்ணிக்கை 8000 ஐ தாண்டியது