நெருங்கி வரும் சிங்கப்பூர் தேசிய தினம்! - களைகட்டும் கொண்டாட்டங்கள்!
சிங்கப்பூர் தேசிய தினவிழாவை முன்னிட்டு பிடோக், தோ பாயோ பகுதியில் மக்கள் வாணவேடிக்கைகளை வெடித்து கொண்டாட்டங்களி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் நாட்டின் தேசிய தினம் வரும் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 8ம் தேதி இரவு அந்நாட்டு மக்களுகாக பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றுகிறார். அதன் தமிழாக்கத்தை அந்நாட்டு சட்டத்துறை அமைச்சரும், பூர்வாங்க தமிழருமான கா.சண்முகம் தமிழில் வாசிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் நாடு முழுவதும் தேசிய தின கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. பிடோக், தோ பாயோ, உட்லண்ட்ஸ், தெம்பனிஸ், ஜூரோங் வெஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், பல்வேறு விளையாட்டுகள் மற்றும் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
தமிழுக்கும் மதிப்பு கொடுக்கும் சிங்கப்பூர்! பிரதமரின் தேசிய தினச்செய்தியை தமிழில் வாசிக்கும் அமைச்சர் சண்முகம்
இதன்மூலம் தேசிய தின விழா உணர்வை, தங்கள் வீடுகளுக்கே கொண்டு வருவதாக அவர்கள் உணர்கின்றனர். நாட்டின் 58வது தேசிய தின விழாவை முன்னிட்டு ஆக்டிவ் எஸ்ஜி தோ பாயோ விளையாட்டுத் திடலில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவருடன் அமைச்சர்கள், இங் எங் ஹென், கான் சியோவ் ஹுவாங், இந்திராணி ராஜா, மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு நடத்தப்பட்ட வாண வேடிக்கையை, குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பிரதமர் லீ சியன் லூங் கண்டுரசித்தார்.
ஐ லவ் சிங்கப்பூர்! 58வது தேசிய தினம் கொண்டாட தயாராகும் சிங்கை மக்கள்!