சிங்கப்பூரர்களுக்கு குட் நியூஸ்.. சுமார் 2.9 மில்லியன் பேருக்கு பணம் தருகிறது சிங்கப்பூர் அரசு.. எவ்வளவு? ஏன்?
Singapore News : சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் நேற்று நவம்பர் 15ம் தேதி புதன்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அனைத்து சிங்கப்பூர் பெரியவர்களும் (அடல்ட்) இந்த ஆண்டு டிசம்பரில் S$200 (12,000 ரூபாய்) மற்றும் S$800 (49,000) வரையிலான "அஷ்யூரன்ஸ் பேக்கேஜின்" கீழ் ரொக்கமான உதவிகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கவலைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எண்டுறம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 2.5 மில்லியன்கள் "அஷ்யூரன்ஸ் பேக்கேஜ்" கேஷ் ஸ்பெஷல் பேமெண்ட்டில் S$200 வரை பெறுவார்கள்.
2024ல் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைத்து சிங்கப்பூரர்களும் இந்த தொகையை பெற தகுதியுடையவர்கள் ஆவர். தனிநபர்களுக்கு உள்ள சொத்துக்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலவினங்களை ஈடுசெய்ய உதவும் வகையில் 2020 பட்ஜெட்டில் இந்த தொகுப்பு முதலில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில் கீழ் கடந்த 2022 முதல் 2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பேஅவுட்கள் தற்போது வழங்கப்படுகின்றன. துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த 2023ம் ஆண்டு பட்ஜெட்டில், அதிக பணவீக்கத்தைக் கணக்கிட அரசாங்கம் உத்தரவாதத் தொகுப்பை மேம்படுத்துவதாகவும், சிங்கப்பூரர்களுக்கு உடனடி வாழ்க்கைச் செலவுக் கவலைகளைத் தீர்க்க கூடுதலாக ஒரு முறை ஆதரவை வழங்கும் என்றும் அறிவித்தார்.
"இந்த மேம்பாடு, அஷ்யூரன்ஸ் பேக்கேஜ், சிங்கப்பூர்க் குடும்பங்களில் பெரும்பாலானோருக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி செலவினங்களை ஈடுசெய்யும் என்பதை உறுதிசெய்கிறது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சுமார் பத்து வருடங்கள் இது ஈடுசெய்யப்படும்" என்று MOF கூறியது.
வாழ்க்கைச் செலவுக்கான ஆதரவுப் பொதியானது, அஷ்யூரன்ஸ் பேக்கேஜில் S$0.8 பில்லியன் மேம்பாட்டை உள்ளடக்கி, அஷ்யூரன்ஸ் பேக்கேஜை S$10 பில்லியனுக்கு மேல் கொண்டு வருகிறது. டிசம்பரில் அஷ்யூரன்ஸ் பேக்கேஜ் ஆதரவைத் தவிர, தகுதியான சிங்கப்பூரர்கள் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கூடுதல் ஆதரவைப் பெறுவார்கள்.