"உங்கள் இசை ஆர்வம் மென்மேலும் வளரட்டும்".. சிங்கப்பூர் துணை பிரதமரை மனதார வாழ்த்திய பிரதமர் மோடி - ஏன்?
Singapore News : சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள், கடந்த நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாட்டங்களின்போது சிதார் இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்ள துவங்கினர். மேலும் சில சுவரங்களை வசித்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார்.
அவர் இந்திய பாரம்பரிய இசைக்கருவியை வாசித்தது, இப்பொது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீபாவளியை கொண்டாடும் வகையில், சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் சித்தார் இசைக்கலைஞரிடம் கற்றுக்கொண்ட பிறகு, கடந்த நவம்பர் 12ம் தேதி அன்று சித்தர் கருவியை வசித்து தீபாவளி வாழ்த்து சொன்னார் சிங்கப்பூர் துணை பிரதமர் வோங்.
இந்நிலையில் திரு. வோங் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் அவரது இந்த "இனிமையான முயற்சிக்கு" தனது "வாழ்த்துக்களை" வோங்கிற்கு தெரிவித்தார். இந்தியாவின் இசை வரலாறு "பன்முகத்தன்மையின் சிம்பொனி" என்று மோடி மேலும் கூறினார்.
Explained: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறாதது ஏன்?
இதற்கு நன்றி தெரிவித்தார் லாரன்ஸ் வோங், தனது தீபாவளி வாழ்த்துக்களையும் மோடி அவர்களுக்கு தெரிவித்தார். இந்தியாவோடு நல்லுறவில் இருந்து வரும் சிங்கப்பூருக்கு கடந்த நவம்பர் 2015ல் மோடி சென்றிருந்தார். அந்த பயணத்தின் போது, லிட்டில் இந்தியாவில் உள்ள கோமளா விலாஸில் பிரதமர் லீ சியென் லூங்குடன் தோசை சாப்பிட்டு மகிழ்ந்தார் மோடி.
"உணவு நன்றாக இருந்தது என்று," என்று கூறி மோடி அந்த உணவகத்தைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட "மிக நெருக்கமான மூலோபாய கூட்டாண்மைக்கு" சான்றாக, அரிசி ஏற்றுமதி மீதான தடையிலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியா விலக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.