putin assassination: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல முயற்சி! சொந்த பாதுகாப்பாளர்கள் தாக்குதல்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கொலை செய்ய முயற்சிசெய்து அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஆனால் பாதுகாப்பு படையினரால் உயிர் தப்பினார் என்று எஸ்விஆர் எனும் ரஷ்ய டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.

Russian President Resists Bodyguards' Assassination Attempt

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கொலை செய்ய முயற்சிசெய்து அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஆனால் பாதுகாப்பு படையினரால் உயிர் தப்பினார் என்று எஸ்விஆர் எனும் ரஷ்ய டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொலை செய்ய 5 முறை முயற்சி நடந்தது என அவரை கடந்த 2017ம் ஆண்டு வெளிப்படுத்தியிருந்தார். தற்போது 6வது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோயில்களுக்கு அருகிலுள்ள மசூதிகள் தாமாகமுன்வந்து அகற்றப்பட வேண்டும்: உ.பி. அமைச்சர் விஷப்பேச்சு

Russian President Resists Bodyguards' Assassination Attempt

உக்ரைன் மீது ரஷ்யா போர்  நடந்து முடிந்தநிலையில் அதிபர் புதின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள், அமெரி்க்க பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய அதிபர் விளாதிமிர் புதின் பதவி விலக வேண்டும் எனக் கோரி அந்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒருபிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள்

இந்நிலையில், அதிபர் விளாதிமிர் புதின் தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு தனது லிமோஷைன் காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்துக்கு குறுக்கே ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

பாலினப் பாகுபாடே காரணம் ! ஆண்-பெண் வேலைவாய்ப்பில் 98% இடைவெளி: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

ஆனால், 2வது பாதுகாப்பு வாகனம் அதை மீறிச் சென்றது. அப்போது, விளாதிமிர்  புதினின் கார் முன்பக்கஇடது சக்கரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு பெரிய சத்தம் எழும்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காரில் இருந்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் அதிபர் புதினின் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். இந்தத் தாக்குதல் முயற்சியில் விளாதிமிர் எந்தவிதமான ஆபத்தின்றி தப்பினார் என யூரோ வீக்லி தெரிவித்துள்ளது.

Russian President Resists Bodyguards' Assassination Attempt

இந்த சம்பவத்தைத்த தொடர்ந்து அதிபர் விளாதிமிர் புதினுக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவலர்கள்  உள்ளட்டோர் பணியில் கவனக்குறைவாக இருந்தமைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு ! வெளிநாடுகளில் வங்கி, தூதகரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தல்

அதுமட்டுமல்லாமல் அதிபர் புதின் எங்கு செல்கிறார், எப்போது புறப்படுவார் என்ற திட்டம் அனைத்தும் அவரின் பாதுகாவலர்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்நிலையில் புதின் வருகையை கணித்து தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணைநடந்து வருகிறது.

இந்த சம்பவத்துக்குப்பின் அதிபர் புதினின் முதல்பாதுகாப்பு வாகனத்தில் வந்த 3 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios