hindi day: இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு ! வெளிநாடுகளில் வங்கி, தூதகரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தல்
இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு, வெளிநாடுகளில் வங்கிகள், அரசு அலுவலகங்கள், தூதரகங்களில் உள்ளிட்ட இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்த உள்துறை அமைச்சகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு, வெளிநாடுகளில் வங்கிகள், அரசு அலுவலகங்கள், தூதரகங்களில் உள்ளிட்ட இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்த உள்துறை அமைச்சகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில்வெளிநாடுகளில் செயல்படும் இந்தி அரசு அலுவலகங்கள் பட்டியல் தரவும், அலுவல்மொழியாக இந்தியைப் பயன்படுத்தவும் அதைக் கண்காணிக்க அலுவல் மொழி அமலாக்கக் குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டது.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபின், இந்தி மொழியை அனைத்து விதத்திலும் ஊக்குவிக்க எடுத்துவரும் நடவடிக்கையில் இதுவும் ஒன்றாகும்.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் “ இந்தி மொழி எந்த மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்படும். அனைத்து மொழிகளும் இணைந்து சென்றால்தான் வளர்ச்சி” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020, தேசிய கல்விக்கொள்கையில், பன்மொழித்திறன் வலியுறுத்தப்பட்டது.அதாவது பள்ளிக்கூடங்களில் மும்மொழிக்கொள்கை முன்மொழியப்பட்டு, குறைந்தபட்சம் இரு மொழிகள் அதில் ஒருமொழி தாய்மொழியாக இருக்க வலியுறுத்தப்பட்டது.
லக்கம்பூர் கெரியில் சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தல்; உ.பி. அரசை விளாசிய பிரியங்கா காந்தி
5ம்வகுப்புவரை கற்றல் பிராந்திய அல்லது தாய்மொழியிலும், 8ம்வகுப்புவரைகூட நீட்டிக்கலாம். அது தாய் மொழி அல்லது பிராந்திய மொழியாக இருக்க வேண்டும் எனத் தெ ரிவிக்கப்பட்டது.
2017ம் ஆண்டு, இந்தி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றது. அதில் இந்தியில் தேர்வு எழுத அனுமதிப்பது, அரசு வேலைக்கு குறைந்தபட்சம் இந்தி மொழி அறிவுஇருத்தல், அரசின் விளம்பரங்களில் 50 சதவீதம் இந்தியில் இருத்தல், ரயில்வே டிக்கெட்டுகள் இரு மொழிகளில் இருத்தல், ஒருமொழி இந்தியாக இருக்க வேண்டும். ரயில்வே அறிவிப்புகளில் சி பிரிவு நிலையங்களான தமிழகம், கர்நாடகம், ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கேரளாவில் இந்தி இடம் பெற வேண்டும்.
மத்திய அரசின் அனைத்து இணையதங்களிலும், அலுவலகங்களிலும் இருமொழிக்கொள்கையும் இதில் இந்தி இருக்க வேண்டும். இணையதங்களில் கண்டிப்பாக இந்தி இருக்க வேண்டும்.
பெரும்பாலான அரசு இணையதளங்கள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. குறிப்பாக சிஆர்பிஎப், பிஎஸ்எப், என்சிஆர்பி ஆகிய இணையதங்கள் ஓபன் ஆகும்போதே இந்தியில்தான் வரும்.
2019ம் ஆண்டு அமித் ஷா உள்துறை அமைச்சராக வந்தபின், அனைத்து ஊழியர்களும் கோப்புகளை இந்திக்கு மொழிபெயர்க்க பணிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சர்களின் பத்திரிகைச் செய்தி முதலில் இ்ந்தியில் வெளியிடப்பட்டு அதன்பின் ஆங்கிலத்தில் வரும்.
உ.பி. லக்கிம்பூர் கெரியில் தலித் சகோதரிகள் பலாத்காரக் கொலை: 6 பேர் கைது
உள்துறை அமைச்சகத்தின் ஏப்ரல் 26ம்தேதி அறிவிக்கையின்படி, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் 7 அலுவலகங்களில் 80%க்கும்மேலான ஊழியர்களுக்கு இந்தியில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
பல்வேறு மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களைக் கொண்ட பொதுவான டிஜிட்டல் அகராதியை உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து கல்வித்துறை அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம், வங்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் எளிதாக பணியாற்றலாம்.