oxfam india:பாலினப் பாகுபாடே காரணம் ! ஆண்-பெண் வேலைவாய்ப்பில் 98% இடைவெளி: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
ஆண்- பெண் வேலைவாய்ப்பில் 98 சதவீதம் இடைவெளி இருப்பதற்கு பாலினப் பாகுபாடுதான் காரணம் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்- பெண் வேலைவாய்ப்பில் 98 சதவீதம் இடைவெளி இருப்பதற்கு பாலினப் பாகுபாடுதான் காரணம் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வித் தகுதியிலும், அனுபவத்திலும் சரிநிகராக இருந்தாலும், சமூகரீதியான தவறான எண்ணங்களால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசு ! வெளிநாடுகளில் வங்கி, தூதகரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தல்
ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் “ இந்தியா பாகுபாடு அறிக்கை 2022” வெளியிடப்பட்டது. 2004-05ம் ஆண்டு தேசிய சாம்பிள்சர்வே, 2018-19ம் ஆண்டு தொழிலாளர் சர்வே, 2019-20ம் ஆண்டு அனைத்து இந்திய கடன் மற்றும் முதலீட்டு சர்வே ஆகியவற்றின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், இந்திய தொழிலாளர் சந்தையில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில் 100 சதவீதம் சமத்துவமின்மையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள், நகரப்புறங்களில் 98 சதவீதமாக இருக்கிறது.
சுயதொழில் செய்யும் ஆண்கள், பெண்களைவிட 2.5 மடங்கு கூடுதலாக வருமானம் ஈட்டுகிறார்கள்.இதில் 83 சதவீதம் பாலினரீதியாக பாகுபாடு நிலவுகிறது.பாகுபாடு காரணமாக, சாதாரண ஆண் தொழிலாளருக்கும், பெண் தொழிலாளருக்கும் இடையே 83 சதவீதம் பாகுபாடு நிலவுகிறது.
லக்கிம்பூர் கெரியில் 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தல்; உ.பி. அரசை விளாசிய பிரியங்கா காந்தி
ஆண்-பெண் இடையே வேலைவாய்ப்பில் 98 சதவீத இடைவெளிக்கு பாலினப்பாகுபாடுதான் காரணமாகும். இந்தியாவில் உள்ள பெண்கள் வேலையில் அனுபவம், கல்வித் தகுதி ஆகிய இரண்டும் ஆண்களுக்கு நிகராக வைத்திருந்தாலும், சமூகத்தில் முன்கூட்டியே எண்ணத்தால், தொழிலார் சந்தையில் பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்.
ஆண், பெண் இடையே வருமானம் ஈட்டுவதிலும் 93 சதவீதம் வேறுபாடு உருவாகுவதற்கும் பாலினப்பாகுபாடுதான் காரணம். கிராமப்புறங்களில் வசிக்கும் சுயதொழில் செய்யும் ஆண் ஒருவர், கிராமப்புற பெண்ணைவிட 2 மடங்கு ஊதியம் ஈட்டுகிறார்.
சாதாரண ஆண் தொழிலாளர் ஒருவர் மாதத்துக்கு சராசரியாக ரூ.3ஆயிரம் ஊதியம் பெண்களைவிட அதிகம் பெறுகிறார். இதற்கு 96சதவீதம் பாலினப்பாகுதான் காரணமாகும்.பாகுபாட்டால் ஆண், பெண் இடையே வருமானம் ஈட்டுவதில் 91.1 சதவீதம் இடைவெளி இருக்கிறது.
குறைவான ஊதியம் பெறும் பெண்களுக்கான காரணத்தை ஆய்வு செய்தால், 67 சதவீதம் பாகுபாட்டு எனத் தெரிகிறது. ஆனால், கல்வித்தகுதி, வேலை அனுபவத்தின் அடிப்படையில் குறைவான ஊதியம் என்ற காரணம் 33 சதவீதம் மட்டுமே இருக்கிறது
ஆதலால், ஆண், பெண் இடையிலான பாலினப் பாகுபாட்டைக் குறைத்து, சமமான ஊதியம் அளித்து, அனைவரையும் சமமாக நடத்தி, பெண்களின் உரிமைகளைக் காக்க வேண்டும். வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு ஊக்கத் தொகையும்,திறன் மேம்பாடு, வேலையில்ஒதுக்கீடு, பேறுகாலத்துக்குப்பின் எளிதாக மீண்டும் வேலைக்கு வரும் வாய்ப்பு போன்றவற்றை செய்ய வேண்டும்.