பிரபாகரன் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்... ராஜபக்சே திடீர் புகழ்ச்சி..!

பிரபாகரன் காலத்தில் இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 
 

Rajapaksa praises the people for not being safe during the Prabhakaran period

பிரபாகரன் காலத்தில் இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். Rajapaksa praises the people for not being safe during the Prabhakaran period

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘’பிரபாகரனின் காலத்தில்கூட மத வழிபாடுகளுக்காக மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக சென்ற நிலையில், இப்போது பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை ரணில் - மைத்திரி அரசுகளுக்கு கிடையாது. எங்களால் அமைய உள்ள புதிய அரசுக்கே அதற்கான உரிமை இருக்கிறது. 

Rajapaksa praises the people for not being safe during the Prabhakaran period

தற்போது நாட்டில் கோவில், பள்ளிகள், தேவாலயங்களுக்குக் கூட மக்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலைமை உள்ளது. இலங்கையில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த போதும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்த போதும் கூட மக்களிடம் இந்த பயம் இருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்திடம் எதை கூறினாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை’’  அவர் தெரிவித்தார். Rajapaksa praises the people for not being safe during the Prabhakaran period

2009ல் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழகர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்தப் போரில் பிரபாகரனும், அவரது மகனும் கொல்லப்பட்டனர். அவர் கொல்லப்பட்டதை பெரும் விழா எடுத்துக் கொண்டாடினார் ராஜபக்சே. இந்நிலையில் பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios