Asianet News TamilAsianet News Tamil

ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு கெடு வைத்த மருத்துவர்கள்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஷ்ய அதிபர் புடின், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக வௌியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

putin has been warned by doctors that he will live only 3 more years
Author
Russia, First Published May 29, 2022, 9:26 PM IST

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஷ்ய அதிபர் புடின், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக வௌியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஷ்ய அதிபர் புடின், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

putin has been warned by doctors that he will live only 3 more years

ரஷ்ய உளவு நிறுவனமான எப்எஸ்பி அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட பிரபல செய்தித்தாளில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது பார்வைத் திறன் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. அவரை கண்ணாடி அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அவர் கண்ணாடி அணிய மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு கண் எரிச்சல் அதிகமாகி உள்ளது. இவரது பணிகளை உளவுத் துறை தலைவரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான நிகோலாய் பெட்ருஷேவ் கவனித்து வருகிறார்.

putin has been warned by doctors that he will live only 3 more years

புடினின் நெருங்கிய நண்பரான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ  விரைவில் மாஸ்கோ வரவுள்ளார். அப்போது அவர் புடினை நேரில் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ரஷ்ய அதிபர் புடின் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை ரஷிய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி போரிஸ் கார்பிச்கோவ் கூறியதாகவும், அவர் தற்போது ரஷ்யாவில் இல்லை என்றும் மிரர் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், புடினின் நோய் மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பான விபரங்களை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios