Asianet News TamilAsianet News Tamil

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் போட்ட ட்வீட்.. பிரதமர் மோடியின் பதில் என்ன?

பிரதமர் மோடியின் அரசுப் பயணத்திற்குப் பிறகு இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். 

President Joe Biden's tweet about India-US relations. Do you know what PM Modi's reply is?
Author
First Published Jun 26, 2023, 11:19 AM IST

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு உலக நன்மைக்கான சக்தி என்றும், இந்த கிரகத்தை மேலும் மேலும் நிலையானதாக மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு உலகிலேயே மிக முக்கியமான ஒன்றாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை புகழ்வதில் ஓபாமா நேரம் செலவழிக்க வேண்டும் - ஜானி மூரே!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் " அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு உலகிலேயே மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இது முன்னெப்போதையும் விட வலிமையானது, நெருக்கமானது மற்றும் அதிக ஆற்றல் கொண்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க அரசு பயணத்தின் வீடியோ தொகுப்பைப் பகிர்ந்துள்ளார்.

 

இந்த நிலையில் பிரதமர் மோடி, ஜோ பைடனின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார். ட்விட்டரில் ஜோ பைடனின் ட்வீட்டை டேக் செய்த மோடி,  "நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான நட்பு உலக நன்மைக்கான சக்தியாகும். இது ஒரு கிரகத்தை மேலும் மேலும் நிலையானதாக மாற்றும். எனது சமீபத்திய பயணத்தின் நிலம் எங்கள் பிணைப்பை இன்னும் பலப்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஜூன் 20ஆம் தேதி அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர், நியூயார்க்கில், ஜூன் 21ஆம் தேதி ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில் ஐநா தலைமையகத்தில் நடந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பின்னர், வாஷிங்டன் டிசியில், வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் ஜோ பைடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். இரு தலைவர்களும் வியாழக்கிழமை ஒரு வரலாற்று உச்சிமாநாட்டை நடத்தினர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மேலும் பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோரால் வெள்ளை மாளிகையில் ஒரு அரசு விருந்து வழங்கப்பட்டது.

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பல முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, எகிப்து அதிபர் சந்திப்பு: இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Follow Us:
Download App:
  • android
  • ios