இந்த படை போதுமா..! இன்னும் கொஞ்சம் வேணுமா...! X-தளத்தில் 100 மில்லியன் ஃபலோயர்களை கடந்த PM Modi!
பிரபல சமூக வலைத்தளமான X தளத்தில், 100 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்தன் மூலம், X தளத்தில்( ட்விட்டர்) அதிகம் பின்தொடரும் உலகத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஆனதற்கு, Elon Musk X- தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூலை 14ம் தேதி பிரதமர் மோடி முதன்முறையாக X தளத்தில் கணக்கை தொடங்கினார். அன்றிலிருந்து துடிப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களை விட விஞ்சியது.
இந்நிலையில், "X-தளத்தில் நூறு மில்லியன்! இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், வாதம்- விவாதம், மக்களின் ஆசீர்வாதம், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றை எண்ணிப்போற்றுகிறேன். எதிர்காலத்திலும் உணர்வுப்பூர்வமான மற்றும் உபயோகமான நேரத்தை எதிர்நோக்குகிறேன்," என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அசூர வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப பில்லியனர் Elon Musk வாழ்த்து தெரிவித்துள்ளார். "அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்!" என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
மற்ற தலைவர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (38.1 மில்லியன் பின்தொடர்பவர்கள்), துபாய் அரசர் ஷேக் முகமது (11.2 மில்லியன் பின்தொடர்பவர்கள்), போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன் பின்தொடர்பவர்கள்) போன்ற உலகளாவிய தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடியின் X- தளத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகம்.
பிரதமர் மோடி ஒரு உலகத்தலைவர் என்பது மீண்டும் நிரூபணம்.. ஆஸ்திரிய அதிபரின் ட்விட்டர் பதிவுகளை கவனிச்சீங்களா?
பிரபலங்கள்...
மக்களின் மனதை வென்ற பிரபலங்களும், பிரதமர் மோடியை விய குறைந்த அளவிலேயே பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளனர். டெய்லர் ஸ்விஃப்ட் (95.3 மில்லியன்), லேடி காகா (83.1 மில்லியன்), மற்றும் கிம் கர்தாஷியன் (75.2 மில்லியன்) மட்டுமே.
விளையாட்டு வீரர்கள்
உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்களுடன் ஒப்பிடும்போது கூட பிரதமர் மோடியின் சமூக ஊடக பின்தொடர்தல் தனித்து விஞ்சி நிற்கிறது. உதாரணமாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் (63.6 மில்லியன்), மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) ஆகியோரை விட பிரதரம் மோடிக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், பிரதமர் மோடியின் X கணக்க்கில், சுமார் 30 மில்லியன் பின்தொடர்பவர்களால் வளர்ந்துள்ளது. 2009 இல் Xதளத்தில் இணைந்ததிலிருந்து, அவர் தொடர்ந்து அதை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், எலான் மஸ்க் மற்றும் பிரதமர் மோடி அமெரிக்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பின் போது, எலான் மஸ்க் தன்னை "மோடியின் ரசிகர்" என்று அழைத்துக்கொண்டு டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஏலியன்களுடன் தொடர்பு முதல் உலக அழிவு வரை.. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..