Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி ஒரு உலகத்தலைவர் என்பது மீண்டும் நிரூபணம்.. ஆஸ்திரிய அதிபரின் ட்விட்டர் பதிவுகளை கவனிச்சீங்களா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு உலகத் தலைவர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆம். ஆஸ்திரிய அதிபரின் ட்விட்டர் பதிவுகளே அதற்கு சாட்சியாக உள்ளன.

Pm Modi Austria Visit Austrian Chancellor Karl Nehammer's twitter post with modi gets highest retweets Rya
Author
First Published Jul 11, 2024, 1:09 PM IST | Last Updated Jul 11, 2024, 1:09 PM IST

2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து அவர் ஆஸ்திரியா சென்றார். ஒரு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி செவ்வாய்கிழமை மாலை வியன்னா சென்றடைந்தார். 41 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியா சென்றிருந்தார். 

வியன்னா சென்ற பிரதமர் மோடியை வரவேற்று ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹம்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் தங்கள் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரியா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினர்.

அப்போது இரு தலைவர்களும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். பேச்சுக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஸ்டார்ட்அப்கள் குறித்தும் ஆராயப்பட்டன, இது தொழில்நுட்ப மற்றும் புதுமையான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே ஆழமான பரஸ்பர புரிதல் மற்றும் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு உலகத் தலைவர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆம். ஆஸ்திரிய அதிபரின் ட்விட்டர் பதிவுகளே அதற்கு சாட்சியாக உள்ளன.. பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹம்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் ட்வீட்டுக்கு 3,100 ரீட்வீட்கள், சுமார் 36,000 லைக்குகள் மற்றும் 1.3 மில்லியன் பார்வைகள் கிடைத்தன.

 

மேலும் பிரதமர் மோடியை டேக் செய்து ஆஸ்திரியாவிற்கு அவரை வரவேற்று மற்றொரு ட்வீட்டையும் கார்ல் நெஹம்மர் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்  சுமார் 2,600 ரீட்வீட்கள், 23,000 லைக்குகள் மற்றும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

 

ஆஸ்த்ரிய அதிபரின் இந்த இரண்டு ட்வீட்களும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பகிரப்பட்டுள்ளன. அவரின் வழக்கமான ட்வீட்டர் பதிவுகளுக்கு, சராசரியாக 100க்கும் குறைவான ரீட்வீட்கள், 300 லைக்குகள் மற்றும் சுமார் 25,000 பார்வைகள் கிடைக்கும். ஆனால் பிரதமர் மோடியை குறிப்பிட்டு அவர் பதிவிட்ட இந்த இரண்டு ட்வீட்டுகளுக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைதளத்தில் பார்வைகள், லைக், ரீ ட்வீட்டில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios