Asianet News TamilAsianet News Tamil

ஏலியன்களுடன் தொடர்பு முதல் உலக அழிவு வரை.. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா வரவிருக்கும் ஆண்டுகளில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை கணித்துள்ளார்.

Contact with Aliens to the end of the World : Baba Vanga's Predictions for the near future Rya
Author
First Published Jul 8, 2024, 8:43 AM IST

பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார். பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர் ஆவார். மேலும் கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும் அவர் கணித்திருந்தார்.

மேலும் உலகளவில் ஒவ்வொரு அண்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்தும் பாபா வங்கா கணித்துள்ளார். அந்த வகையில் வரவிருக்கும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பது குறித்தும் கணித்துள்ளார். அவரின் கணிப்புகளில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியைப் பதம் பார்க்க வரும் ஆபத்து... 65,000 கி.மீ. வேகத்தில் மோத வரும் கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

பாபா வங்காவின் சில அதிர்ச்சியூட்டும் கணிப்புகள் சில

2025: ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதல் நடக்கும். இது அந்த கண்டத்தின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுக்கும்
2028: புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறியும் முயற்சியில் மனித இனம் ஈடுபடும். இதற்காக மனிதர்கள் வெள்ளி கிரகத்திற்கு செல்வார்கள். 
2033: துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும்
2076: கம்யூனிசம் உலகளவில் பரவும்
2130: வேற்று கிரக வாசிகளிடன் நாகரிகங்களுடன் தொடர்பு
2170: 2170 உலகளாவிய வறட்சி ஏற்படும்.
3005: செவ்வாய் கிரகத்தில் ஒரு போர் நடக்கும்.
3797: பூமியின் அழிவு ஏற்படும். எனினும், மனிதகுலம் சூரிய குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு நகரும் திறன் பெற்றிருக்கும்.
5079: ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடும்.

பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான சில கணிப்புகள்

புடின் படுகொலை

2024ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள்

மிகப்பெரிய வல்லரசு நாடு உயிரியல் ஆயுதங்களின் சோதனைகள் அல்லது தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று அவர் கனித்துள்ளார்.

உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகளின் லிஸ்ட் இதோ..! நம்பர் ஒன் இந்த நாடா..?!

யார் இந்த பாபா வங்கா

பாபா வங்கா 1911 இல் வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். இருப்பினும், அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் கழித்தார். இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டரோவா. பாபா வங்கா, தனது 12-வது வயதில் மிகப்பெரிய புயலில் சிக்கி, தனது பார்வையை இழந்தார். எனினும் அதன்பிறகு அவர், எதிர்காலத்தை பற்றி கணிக்க தொடங்கினார். அவரின் பல கணிப்புகள் உண்மையானதால் அவை மிகவும் நம்பிக்கைக்குரியவையாக பார்க்கப்படுகின்றன. எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசனம் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காக அவர் புகழ் பெற்றார். பாபா வங்கா 1996 இல் இறந்தார். அவரின் கணிப்புகள் 85 சதவீதம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios