Asianet News TamilAsianet News Tamil

உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகளின் லிஸ்ட் இதோ..! நம்பர் ஒன் இந்த நாடா..?!

Richest Muslim Countries : உலகில் பல பணக்கார முஸ்லிம் நாடுகள் உள்ளன. அது எந்தெந்த நாடுகள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

list of richest muslim countries in the world in tamil mks
Author
First Published Jul 6, 2024, 2:24 PM IST | Last Updated Jul 6, 2024, 2:34 PM IST

மக்கள் தொகை அடிப்படையில் 'இஸ்லாம்' தான் உலகளவில் இரண்டாவது பெரிய மதமாக கருதப்படுகிறது. இந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 பில்லியன் ஆகும். இந்தோனேசியா, சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவே உள்ளனர். ஆனால், இந்த நாடுகளின் பொருளாதார வருமான நிலைகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதாவது, சில நாடுகளில் பல மிகவும் பணக்காரர்களாகவும், சில நாடுகள் மிகவும் ஏழ்மையாகவும் உள்ளன. எனவே, இப்போது இந்த கட்டுரையில் உலகில் பணக்கார முஸ்லீம் நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இந்த நாட்டில் இந்தியாவின் ஒரு ரூபாய் 500 ரூபாய்க்கு சமம்.. எந்த நாடு தெரியுமா..?

உலகின் பணக்கார முஸ்லீம் நாடுகள் லிஸ்ட்:

1. கத்தார், தான் உலகின் முதல் பணக்கார முஸ்லீம் நாடு. இந்த நாடு ஒன்னு புள்ளி ஏழு மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது 2011 ஆம் ஆண்டு கத்தாரின் தனிநபர் வருமானம் தோராயமாக, 88,919 அமெரிக்க டாலர் ஆகும். இந்த காரணத்திற்காக தான், கத்தார் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக, கத்தாரின் இந்த செல்வ வளத்திற்கு 
இயற்கை எரிவாயு எண்ணை மற்றும் பெட்ரோல் கெமிக்கல்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் தான்.

2. கத்தாருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பணக்கார முஸ்லீம் நாடு குவைத் ஆகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம். 2011ம் ஆண்டில் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் 54,664 அமெரிக்க டாலர். மற்றும் 104 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பும் இருந்தது. இந்த நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் தவிர்த்து, கப்பல் வர்த்தகத்திலும் முக்கிய பங்களிப்பு வகிக்கிறது.

 3. புருனே, உலகின் மூன்றாவது முஸ்லீம் பணக்கார நாடாகும். இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. 2010 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் 50,506 அமெரிக்க டாலராக இருந்தது. மேலும், 80 ஆண்டுகளாக சிறந்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களால் இந்த நாட்டின் செல்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்த நாடு ஹைட்ரஜன் வள ஏற்றுமதியில் 90 சதவீதம் பங்களிக்கிறது. உங்களுக்கு தெரியுமா..  இந்த நாடு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகின் ஒன்பதாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும், எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாகவும் உள்ளது. இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.

4. உலகில் பணக்கார முஸ்லிம் நாடுகளில் நான்காவது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெரும் தொகையை ஈட்டுகிறது. 

5. உலகின் ஐந்தாவது பணக்கார முஸ்லிம் நாடு ஓமன் ஆகும். இந்த நாட்டின் எரிவாயு இருக்கு 849.5 பில்லியன் கன மீட்டர் வரை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த நாட்டில் தாமிரம் தங்கம் துத்தநாகம் வெற்றி விருந்து ஆகியவற்றின் பெரிய இருப்புகளும் உள்ளது.

6. இதில் சுவாரசியம் என்னவென்றால், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு சவுதி அரேபியா ஆறாவது இடத்திலும், பக்ரைன் ஏழாவது இடத்திலும் உள்ளது.  ஆனால், இந்த பணக்கார முஸ்லிம் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இல்லை.

இதையும் படிங்க:  உலகில் இன்று வரை மழையே பெய்யாத கிராமம் பற்றி தெரியுமா..? 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios