அபுதாபி சென்றிருக்கும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவுகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இரண்டு நாள் பயணமாக பாரிஸ் சென்ற பிரதமர் மோடி சனிக்கிழமை விமானம் மூலம் அபுதாபி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஒருநாள் பயணத்தில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து இரண்டு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவுகள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட மோடி, அந்நாட்டின் தேசிய தின அணிவகுப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து ஒருநாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார்.

விருந்தில் விதிமுறைகளை பிரதமர் மோடிக்காக தளர்த்திக் கொண்ட பிரான்ஸ்; விருந்தில் இதுவும் இடம் பெற்றது!!

Scroll to load tweet…

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். "எனது நண்பர் ஹெச்.எச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

"எங்கள் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, ஃபின்டெக், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ளன" என்றும் பிரதமர் மோடி கூறினார்.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் மையப் பகுதிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

ஆஸி.,யில் இந்திய மாணவரை இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

Scroll to load tweet…

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஈடுபாட்டிற்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுத்த விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA), கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கையெழுத்தானது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர் சமூகம் அந்நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் ஆகும். ஐக்கிய அரபு அமீரக அரசின் பதிவுகளின்படி 2021ஆம் ஆண்டில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மூன்று புதிய ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள்! இந்தியா - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து