ஆஸி.,யில் இந்திய மாணவரை இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

தாக்கப்பட்ட 23 வயதாகும் இந்திய மாணவர் தலை, கால் மற்றும் கைகளில் படுகாயங்களுடன் வெஸ்ட்மீட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Khalistan Radicals Drag Indian Student, Thrash Him With Iron Rods In Australia

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை எதிர்த்ததற்காக 23 வயது இந்திய மாணவர் ஒருவர் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியான மெர்ரிலேண்ட்ஸில் ஓட்டுநராக பணிபுரியும் அந்த மாணவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் இந்திய மாணவரைத் தாக்கும்போது "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட்டனர் என்று அந்நாட்டு ஊடக்கம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"காலை 5.30 மணியளவில் நான் வேலைக்குச் செல்லும்போது, ​​4-5 காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கினர்" என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். "நான் எனது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவுடன், இந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் எங்கிருந்தோ வந்தனர். அவர்களில் ஒருவர் எனது வாகனத்தின் இடது பக்க கதவைத் திறந்து, உள்ளே புகுந்து என் கன்னத்தில் இரும்புக் கம்பியால் தாக்கினார்" என்றும் அவர் கூறியுள்ளார்.

நள்ளிரவில் வீடு புகுந்து தலித் பெண்ணைக் கடத்தி கொடூரக் கொலை! கிணற்றில் வீசப்பட்ட உடலில் குண்டு காயங்கள்!

Khalistan Radicals Drag Indian Student, Thrash Him With Iron Rods In Australia

பின், மாணவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து இரும்புக் கம்பியால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இரண்டு பேர் இந்தத் தாக்குதலை வீடியோ பதிவும் செய்துள்ளனர். "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 5 நிமிடத்தில் நடந்துள்ளது.

காலிஸ்தான் பிரச்சனையை எதிர்த்ததற்காக தன்னைத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. தாக்கப்பட்ட 23 வயதாகும் இந்திய மாணவர் தலை, கால் மற்றும் கைகளில் படுகாயங்களுடன் வெஸ்ட்மீட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துமாறு ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றபோதும் இதனை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

துபாய் புர்ஜ் கலிபாவில் ஒளிரும் மூவர்ணக் கொடி! பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் வரவேற்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios