நள்ளிரவில் வீடு புகுந்து தலித் பெண்ணைக் கடத்தி கொடூரக் கொலை! கிணற்றில் வீசப்பட்ட உடலில் குண்டு காயங்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன தலித் பெண்ணை துப்பாக்கி குண்டு காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலைச் சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன தலித் பெண் உடலில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருப்பது மாநிலத்தில் அரசியல் பதட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் சட்டசபையில் கூட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கோரியுள்ளனர்.
உயிரிழந்த 19 வயது இளம்பெண் ஜூலை 12ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து நான்கு பேரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
ஆஸி.,யில் இந்திய மாணவரை இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
இந்த விவகாரத்தில் காவல்துறை அலட்சியமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். "அதிகாலை 3 மணி அளவில் மூன்று நான்கு பேர் வந்து அளது வாயில் துணியை வைத்து அடைத்து அழைத்துச் சென்றார்கள். அதைப் பார்த்துவிட்டு நான் அலறி அழுதேன். பிறகு நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றோம். ஆனால், அங்கு போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். வழக்குப் பதிவு செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறி, என்னை வெளியே போகச் சொன்னார்கள்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறுகிறார்.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தத்தும் இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். "நாங்கள் பாதிக்கப்பட்டவரின் தாயிடம் பேசினோம், அவர் யாரையாவது சந்தேகிக்கிறாரா என்று கேட்டோம். அவர் இதுவரை எந்த பெயரையும் தெரிவிக்கவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தர்ணாவுக்கு தலைமை தாங்கும் பாஜகவின் ராஜ்யசபா எம்பி கிரோடி லால் மீனா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ! இன்று முதல் கடன் மீதான வட்டி விகிதம் அதிகரிப்பு!
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும் தலித் பெண் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை நிர்வாகம் ஒவ்வொரு கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகள் மீதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், "இந்த வழக்கை ஆழமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.
இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. "பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயமாகத் தெரிகிறது" என்று கரௌலி எஸ்பி மம்தா குப்தா கூறினார். சோதனைக்குப் பிறகு, பலாத்காரம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்வார்கள் எனவும் கூறியிருக்கிறார்.
5.4 வினாடியில் 100 கி.மீ வேகத்தில் பறக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார்! விலை எவ்வளவு தெரியுமா?