விருந்தில் விதிமுறைகளை பிரதமர் மோடிக்காக தளர்த்திக் கொண்ட பிரான்ஸ்; விருந்தில் இதுவும் இடம் பெற்றது!!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பல்வேறு நடைமுறைகளை தளர்த்திக் கொண்டு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்து கவுரவித்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்று இருந்தார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிற்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு மோடிக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதை ஏற்று பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார். நேற்று நடந்த தேசிய தின விழாவில் இருநாடுகளின் விமானப்படை, ராணுவப்படை மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மூன்று ரஃபேல் ரக விமானங்கள் இந்த அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டு இருந்தன. இருநாடுகள் இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியுமான பிரிகெட்டி மேக்ரான் தேசிய தினத்தன்று லூவ்ரே மியூசியத்தில் பிரதமருக்கு விருந்தளித்தனர். இந்த மியூசியத்தில் கடந்த 1953ல் கடைசியாக ராணி எலிசபெத்துக்கு விருந்து அளிக்கப்பட்டு இருந்தது.
விருந்தில் இந்தியா-பிரான்ஸ் உறவு உணவிலும் எதிரொலித்தது. பிரான்ஸ், இந்திய உணவுகளுடன் ஒயின் மற்றும் ஷாம்பெயின் பரிமாறப்பட்டன. பிரதமர் மோடியின் உணவு தேவைகளைக் கருத்தில் கொண்டு, உணவு முற்றிலும் சைவமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பரிசளித்து அசத்திய மோடி - லிஸ்ட் ரொம்ப பெருசு !!
பொதுவாக பிரான்ஸ் நாட்டில் விருந்து அளிக்கும்போது கூட உணவிலும் அவர்களது நாட்டின் தேசிய வர்ண நிறத்தில்தான் உணவு பரிமாறுவார்கள். ஆனால், இந்த விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு பிரதமருக்கு இந்திய தேசியக் கொடியில் இடம் பெறும் மூவர்ண நிறத்தில் உணவுகள் பறிமாறப்பட்டன.