Asianet News TamilAsianet News Tamil

Nishtar Hospitalவைரல் வீடியோ!மூல்தான் மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் 200 உடல்கள்:பாகிஸ்தான் அரசு விசாரணை

பாகிஸ்தானின் மூல்தான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டுபிடிக்குப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pakistans Multan hospital roof where 200 rotting bodies were discovered; investigation ordered
Author
First Published Oct 15, 2022, 8:39 AM IST

பாகிஸ்தானின் மூல்தான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டுபிடிக்குப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. 

மூல்தான் நகரில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் நெஞ்சை பதபதவைக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையில் ஏராளமான மனித உடல்கள் அழுகி நிலையில் கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இந்தியா உள்பட சில நாடுகள்தான் தாக்குப்பிடிக்கின்றன: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பஞ்சாப் மாகான முதல்வர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஜியோ சேனலுக்கு அளித்த பேட்டியில் “ விசூலூதி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மூல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தேன். அப்போது மருத்துவமனையில் உள்ள பிணவறையை திறக்க அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால், பிணவறைக் கதவுகளை திறக்க அவர்கள் தயங்கினார்கள்,கதவை திறக்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தேன். 

பிணவறை திறக்கப்பட்டவுடன் உள்ளே சென்றுபார்த்தபோது, 200க்கும் மேற்பட்ட  உடல்கள் குவியலாக வைக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தன. அனைத்து ஆண், பெண் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து விளக்கம்  அளிக்கவும், ஏன் மனித உடல்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது இனவெறியுடன் 11இடங்களில் கத்திக் குத்து! சென்னை ஐஐடியில் படித்தவர்

இத்தனை உடல்களும் மருத்துவமனை மாணவர்கள் பயிற்சிக்கானதா அல்லது மனித உடல்களை விற்பனை செய்கிறீர்களா என்று மருத்துவர்களிடம் கேட்டேன். ஆனால், மருத்துவ மாணவர்கள் கல்விக்காக இந்த உடல்களை வைத்துள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்தார்கள். மருத்துவமனை மாடியில் இரு உடல்கள் கிடந்தன அந்த உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. என்னுடைய 50 ஆண்டு கால வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை.

 

ஏறக்குறைய 35 உடல்களை கழுகுகள், பருந்துகள் கொத்தித் தின்று, உடல்கள் சிதைந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. மருத்துவ மாணவர்கள் கல்விக்காக உடல்கள் பயன்படுத்தப்பட்டவுடன் முறைப்படி புதைத்திருக்க வேண்டும், ஆனால் அனைத்தை உடல்களையும் மாடியில் வீசியுள்ளனர். 

அனைத்து உடல்களையும் அடக்கம் செய்ய உத்தரவி்ட்டுள்ளேன். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளேன். கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்

சீனா உருவாக்கிய உலகின் பறக்கும் கார் ! மணிக்கு 160 கி.மீ வேகம்! இருவர் மட்டும் பயணம்

மருத்துவமனை மாடியில் திறந்தவெளியில் உடல்களை வீசி எறிந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன
 

Follow Us:
Download App:
  • android
  • ios