உலகிலேயே முதல் பறக்கும் காரை சீனாவின் எக்ஸ்பெங் (Xpeng Aeroht) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த காரை சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் பறக்கவைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் பறக்கும் காரை சீனாவின் எக்ஸ்பெங் (Xpeng Aeroht) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த காரை சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் பறக்கவைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலீஜ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி: பிரிட்டிஷ் ஆட்சியில்கூடஇப்படி இல்லீங்க ! கெஜ்ரிவால் குமுறல்
சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங் உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்து, திங்கள்கிழமை சோதனை ஓட்டம் நடத்தியது. எதிர்காலத் தலைமுறையினர் போக்குவரத்து சிக்கலில் சிக்காமல், வாழ்க்கையை எளிமையாக நடத்த இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தில், கார் போன்ற வடிவத்தில் இந்த பறக்கும் பேட்டரி காருக்கு எக்ஸ்பெங் எக்ஸ்2 என பெயரிடப்பட்டுள்ளது. துபாயின் ஸ்கைடைவ் பகுதியில், துபாய் வர்த்தக மையத்தில் நடந்த, கிடெக்ஸ் குளோபல் டெக் ஷோ நிகழ்ச்சியின் போது, இந்த எக்ஸ்2 பறக்கும் சார் சோதனை ஓட்டமாக பறக்கவிடப்பட்டது.
ஆட்கள் யாரும்அமராமல், பறக்கும் கார் பறக்கவைத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த காரில் அதிகபட்சமாக இருவர் அமரலாம். காரின் எடை 560 கிலோ. அதிகபட்சமாக 760கிலோ எடை வரை தாங்கி பறக்கக்கூடியது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் விதத்தில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ப்ரீமியம் கார்பன் பைபர் மற்றும் ஏர்பிரேம் பாராசூட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாப்பிடும்‘தட்டு’; தேங்காய் ‘ஸ்ட்ரா’! 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி அழைப்பு
உலகின் முதல் பறக்கும் கார் என்று இதைக் கூற முடியாது, இதற்கு முன் பறக்கும் கார் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது இந்தகாரில்தான்.
இந்தகாரை பறக்கவிடும் முன் துபாய் நிர்வாகத்தின் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி பெற்று எக்ஸ்-2 பறக்கும் காரின் சோதனை ஓட்டம் நடந்தது.
பறக்கும் கார்கள் வர்த்தகரீதியான பயன்பாட்டுக்குஅடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
