அடேய்.. பாகிஸ்தான்காரா இது நியாயமா.? தலிபான்களிடம் சிக்க வைத்து விட்டு கதவை மூடிட்டியே சரியா.. குமுறும் ஆப்கன்

அதுவும் குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் வர்த்தக பாதையாக செயல்பட்டுவந்த  டோர்காம் பாதையை பாகிஸ்தான் மூடியது. இதற்கான தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் அஹமத் தெரிவித்திருந்தார். 

Pakistan closed its doors to the afghan people .. The sin of women will not leave pakistan.

தலிபான்களிடமிருந்து தப்பி ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் தனது எல்லையை மூடி சீல் வைத்த சம்பவம், ஆப்கன் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் அந்நாட்டைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் பாகிஸ்தான் மீது கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மூடப்பட்ட எல்லை வர்த்தக காரணங்களுக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு மக்களும் அதை கடக்காதபடி பாதுகாப்பு வலுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆப்கன் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

Pakistan closed its doors to the afghan people .. The sin of women will not leave pakistan.

ஆப்கான் அரசு படைக்கும்-இஸ்லாமிய அடிப்படைவாத தலிபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. மொத்த  ஆப்கானிஸ்தானும் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தலிபான்களின் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ஏராளமான ஆப்கனிஸ்தான் மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழி தேடி வருகின்றனர். காபூல் விமான நிலையத்திலிருந்து மக்கள் வெளியேறாதபடி துப்பாக்கி ஏந்திய தாலிபன்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கனிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அறிந்த பாகிஸ்தான் ஏராளமான ஆப்கானியர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடும் என்பதால், அவசர அவசரமாக தனது எல்லையை மூடி சீல் வைத்தது. 

Pakistan closed its doors to the afghan people .. The sin of women will not leave pakistan.

அதுவும் குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் வர்த்தக பாதையாக செயல்பட்டுவந்த  டோர்காம் பாதையை பாகிஸ்தான் மூடியது. இதற்கான தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் அஹமத் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் காரணமாக டோர்காம் பாதையை மூட முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். குறிப்பாக ஆப்கன் ராணுவம் மற்றும் போலீசார் தலிபான்களிடம்  சரணடைந்த போது எல்லை மூடப்பட்டதாக அவர் கூறினார். ஏராளமான ஆப்கனியர்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் நுழைய நேரிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஒரு வார காலத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் அந்த பாதை சில வர்த்தக காரணங்களுக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு அதில் அனுமதியில்லை. 

Pakistan closed its doors to the afghan people .. The sin of women will not leave pakistan.

ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றும், தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்தது பாகிஸ்தான்தான் என்றும், தங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் தலிபான்களிடம் சிக்க வைத்துவிட்டு, பாகிஸ்தான் தன் எல்லையை மூடிக்கொண்டது, ஆப்கன் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. ஏற்கனவே இது குறித்து தெரிவித்த ஆப்கனிஸ்தான் பெண்கள், எங்களின் பாவமும், எங்கள் குழந்தைகளின் பாவமும் பாகிஸ்தானை  அழிக்காமல் விடாது, அந்த ஹல்லா பாகிஸ்தானை ஒரு கல்லறையாக மாற்றுவதாக என சபித்துவரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios