சந்திராயன் தோல்வியைக் கொண்டாடும் பாகிஸ்தான்... உற்சாக நடனமாடி வெறுப்பேற்றும் போலி மோடி..!

சந்திரயான் 2 லேண்டரில் இருந்து சிக்னல்கள் கிடைக்காததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களுமே நொறுங்கிப் போயுள்ள நிலையில் பாகிஸ்தான் அதனை கொண்டாடி வருகிறது. 

Pakistan celebrating the defeat of Chandrayaan

சந்திரயான் 2 லேண்டரில் இருந்து சிக்னல்கள் கிடைக்காததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்களுமே நொறுங்கிப் போயுள்ள நிலையில் பாகிஸ்தான் அதனை கொண்டாடி வருகிறது. Pakistan celebrating the defeat of Chandrayaan

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், கட்டுப்பாட்டு மையத்தின் உடனான சிக்னலை இழந்தது. இதனால், திட்டமிட்டபடி, லேண்டர் தரையிறங்கியதா என்பதை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வுகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.Pakistan celebrating the defeat of Chandrayaan

லேண்டர் தரையிறங்குவதை பார்க்க பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அங்கிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் போது, இஸ்ரோ தலைவர் கே.சிவன் கண் கலங்கினார். சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமரும் சிறிது கண் கலங்கினார். இப்படி நாடே சந்திராயன் -2 தோல்வியால் சோகத்தில் மூழ்க இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தான் இந்த தோல்வியை கொண்டாடி வருகிறது. 

 

பிதமர் மோடியை போல இருக்கும் ஒருவர் உற்சாக நடனமாடிக் கொண்டே இருக்கும்போது திடீரென அதிர்ச்சியாகிறார். அதாவது சந்திராயன் -2 வெற்றியால் மோடி உற்சாகமாக இருந்ததாகவும், தோல்வியடைந்ததை அறிந்ததும் மோடி அதிர்ச்சியடைவதை போலவும் அந்த முதியவரின் நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களின் வைரலாகி வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios