பல நூறு கோடி ஆன்லைன் மோசடி.. 30 பேர் கொண்ட கும்பலுக்கு 96 ஆண்டுகள் சிறை - சிக்கியது எப்படி?

பல தனி நபர்களையும் பெரிய பெரிய நிறுவனங்களையும் குறிவைத்து இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Online Scam group of 30 members jailed for 96 years in dubai

ஆன்லைன் மூலம் எப்படி வேண்டுமானாலும், எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் திருட முடியும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது துபாயில் நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம். தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் கொண்ட கும்பலையும், ஏழு நிறுவனங்களையும் Money Laundering எனப்படும் பணமோசடி சட்டத்தின் கீழ் தண்டித்துள்ளது துபாய் போலீஸ். 

பிரபல அமீரக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மோசடியில் சுமார் 32 மில்லியன் Dirhams அளவிற்கு (இன்றைய மதிப்பில் 1 Dirham என்பது 22 இந்திய ரூபாய்) ஆன்லைனில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், பல தனி நபர்களையும் பெரிய பெரிய நிறுவனங்களையும் குறிவைத்து இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய சுமார் ஏழு நிறுவனங்களையும் 30 பேர் கொண்ட கும்பலையும் துபாய் போலீசார் சிறை பிடித்துள்ளனர்.

கார் ஏறியதில் 13 மாத குழந்தை பலி: தாயால் நேர்ந்த சோகம்!

கைதான அந்த 30 பேருக்கு சுமார் 96 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இந்த தண்டனை காலம் முடிந்த பிறகு அவர்கள் உயிரோடு இருக்கும் பட்சத்தில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் துபாய் அரசு அறிவித்துள்ளது. இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் அந்த ஏழு நிறுவனங்களுக்கு சுமார் 7 லட்சம் Dirhams அபராதம் விதித்துள்ளனர். 

தனிநபர்களுக்கும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் மோசடி ஈமெயில்களை அனுப்புவதன் மூலம் இந்த மாபெரும் கொள்ளை நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் இவர்களுடைய வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாய் அரசை பொருத்தவரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இது போன்ற கொள்ளை சம்பவங்களை மிக கடுமையாக கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் முன்பு தள்ளி விட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை! சதீஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios