Asianet News TamilAsianet News Tamil

கார் ஏறியதில் 13 மாத குழந்தை பலி: தாயால் நேர்ந்த சோகம்!

தாயின் கார் ஏறியதில் 13 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Toodler dies after her mother accidently runs car over her
Author
First Published Jul 10, 2023, 1:19 PM IST

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ஜாஃப்ரியா தோர்ன்பர்க். இவரது 13 மாத குழந்தை சைரா ரோஸ். இவர்களது குடும்பம் காட்டன்வுட் பகுதியில் வசித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி ஜாஃப்ரியா தோர்ன்பர்க், தனது வீட்டருகே அவரது காரை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக, கார் பின்னோக்கி சென்று, குழந்தை சைரா ரோஸ் மீது மோதியுள்ளது.

இதில், அக்குழந்தை படுகாயமடைந்தது. தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த யாவாபாய் மாவட்ட ஷெரிப் அலுவலக ஊழியர்கள், குழந்தைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக அக்குழந்தை கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை யாவாபாய் மாவட்ட ஷெரிப் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படுமா என்பது தற்போது வரை தெரியவில்லை. அதேசமயம், யாவாபாய் மாவட்ட ஷெரிப் அலுவலகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

காதலி பேரில் மட்டும் ரூ.900 கோடி உயில்: மறைந்த முன்னாள் பிரதமர் தரமான சம்பவம்!

கடந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி பிறந்த குழந்தை சைரா ரோஸ், கடந்த 6ஆம் தேதி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்பு குறித்து அவரது மாமா உருக்கமான பதிவிட்டுள்ளார். குழந்தையின் இறுதி சடங்குகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடை வழங்குமாறு,  GoFundMe-இல் கேட்டுக் கொண்டுள்ளார். அதில், “எந்தவொரு நன்கொடையும் இறுதிச் செலவினங்களுக்காக குழந்தையின் பெற்றோரை சென்றடையும். இந்த கடினமான நேரத்தில் அவர்களின் சுமைகளில் சிலவற்றை அவை குறைக்கும். இதுபோன்ற சோகங்களுக்கு ஒருபோதும் நல்ல நேரம் இல்லை; ஆனால், அக்குடும்பம் ஏற்கனவே மோசமான நேரத்தை சந்தித்து வருவதற்கிடையே, இந்த சோக சம்பவமும் நடந்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios