ரயில் முன்பு தள்ளி விட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை! சதீஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து! என்ன காரணம் தெரியுமா?
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இதையும் படிங்க;- 500 டாஸ்மாக் கடைகள் மூடல்! ரூ.35 கோடி வருவாய் இழப்பு! அமைச்சர் முத்துசாமி இன்று எடுக்க போகும் முக்கிய முடிவு.!
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் நிலையத்தினர் அக்டோபர் 14ஆம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க;- முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
இந்த உத்தரவை எதிர்த்து சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், பரங்கிமலை சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.