MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 500 டாஸ்மாக் கடைகள் மூடல்! ரூ.35 கோடி வருவாய் இழப்பு! அமைச்சர் முத்துசாமி இன்று எடுக்க போகும் முக்கிய முடிவு.!

500 டாஸ்மாக் கடைகள் மூடல்! ரூ.35 கோடி வருவாய் இழப்பு! அமைச்சர் முத்துசாமி இன்று எடுக்க போகும் முக்கிய முடிவு.!

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் 25 சதவீதம் வருவாய் குறைந்ததை அடுத்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 10 2023, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தமிழ்நாட்டில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23

இதன் காரணமாக, டாஸ்மாக்கில் தினசரி வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடி தான் தினசரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

33

இந்நிலையில், மதுபான விற்பனை குறைந்தது தொடர்பாகவும், அதிக விலைக்கு மது விற்பனை தடுப்பது, பிரச்சனைக்குரிய கடைகளை மூடுவது, சிசிடிவிக்கள் பொருத்துவது, கணினி வழி ரசீது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவை குறித்து  தலைமைச் செயலகத்தில்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image2
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
Recommended image3
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved