Asianet News TamilAsianet News Tamil

இனி இந்திய சுற்றுலா பயணிகள், ஈபிள் டவரில் ரூபாயில் பணம் செலுத்தலாம்.. பிரான்ஸில் பிரதமர் மோடி அறிவிப்பு..

இந்திய சுற்றுலாப் பயணிகள் விரைவிலேயே, பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரில் இருந்து UPI மூலம் ரூபாயிலேயே பணம் செலுத்த முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Now Indian tourists can pay in rupees at the Eiffel Tower.. PM Modi announced in France..
Author
First Published Jul 14, 2023, 8:14 AM IST | Last Updated Jul 14, 2023, 9:58 AM IST

பிரான்ஸ் நாட்டிற்கு 2 நாள் அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, La Seine Musicale என்ற கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய சுற்றுலாப் பயணிகள், மிக விரைவிலேயே ஈபிள் கோபுரத்தில் இருந்து UPI ஐப் பயன்படுத்தி  ரூபாயில் பணம் செலுத்த முடியும் என்று தெரிவித்தார். மேலும் "பிரான்சில், இந்தியாவின் UPI ஐப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும், இப்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம், ஈபிள் டவரில் ரூபாயிலேயே பணம் செலுத்த முடியும்," என்று தெரிவித்தார்

2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் UPI சேவைகளை வழங்கும் அமைப்பான National Payments Corporation Of India (NPCI), பிரான்ஸின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கட்டண முறையான Lyra உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2023 இல், UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow உடன்படிக்கையில் கையெழுத்திட்டன, இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கின்றனர். UAE, பூட்டான் மற்றும் நேபாளம் ஏற்கனவே UPI கட்டண முறையை ஏற்றுக்கொண்டன. NPCI இன்டர்நேஷனல் UPI சேவைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவில் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி, பிரான்ஸில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மோடி, மோடி, பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களுக்கு மத்தியில், இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் செர்ஜி மாகாணத்தில் திருவள்ளுவரின் சிலை கட்டப்படும் என்றும் மோடி கூறினார். பிரான்ஸில் முதுகலைப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு நீண்ட கால ஐந்தாண்டு விசாவை வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

ஒரு வளர்ந்த தேசமாக வெளிவர விரைவான முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்திய சமூகம் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

"இன்று ஒவ்வொரு ரேட்டிங் ஏஜென்சியும் இந்தியா ஒரு பிரகாசமான புள்ளி என்று கூறுகிறது. நீங்கள் இப்போது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள். இதுவே சரியான நேரம். முன்கூட்டியே முதலீடு செய்பவர்கள் பலனை அடைவார்கள்" என்று மோடி கூறினார்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் பன்முகத்தன்மையின் தாய் என்றும் மோடி கூறினார். "இது எங்களின் மிகப்பெரிய பலம். இந்தியாவில், 100க்கும் மேற்பட்ட மொழிகள், 1,000 கிளைமொழிகள் உள்ளன. இந்த மொழிகளில் தினமும் 32,000க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன," என்று பிரதமர் தெரிவித்தார்.

“ Alliance Française-ன் முதல் இந்திய உறுப்பினர் நான் தான்” 40 ஆண்டுகால தொடர்பை நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios