அமெரிக்காவுக்கு உயிர்பயத்தை காட்ட துணிந்த கிம் ஜாங் உன்..!! வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை.

இதனால் வடகொரியா, தென்கொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது, இது இருநாட்டுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 

north Korea president kim jang unn warning america for south Korea issue

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை காண வேண்டும் என விரும்பினால், அவர்கள் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான விவகாரத்தில்  இருந்து விலகி, தங்கள் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என வட கொரியா எச்சரித்துள்ளது. அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ-வில் வெளியான செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோல் உடனான அனைத்து தொடர்புகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட கொரியா அறிவித்தது, அதாவது வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் ஒரு சர்வாதிகாரி என சித்தரித்து, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வட கொரிய எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசினர், இந்த சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்த வடகொரியா, எல்லையில் அத்துமீறிய தங்கள் நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை தென்கொரியா ஒடுக்க வேண்டும், இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என வடகொரியா, தென்கொரியாவை எச்சரித்தது. அதே நேரத்தில், இருநாட்டு எல்லையில் கட்டப்பட்டுள்ள லைசான் அலுவலகமும் (தகவல் தொடர்பு அலுவலகம்) மூடப்படும் என வடகொரியா காட்டமாக கூறியது.

north Korea president kim jang unn warning america for south Korea issue 

இது குறித்து வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சக்திவாய்ந்த தங்கை கிம்-யோ-ஜாங் வெளியிட்ட அறிக்கையில், 2018 ஆம் ஆண்டில், கிம்-ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டுக்கும் இடையே பரஸ்பர அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென்கொரியாவின் சமூக சேவையாளர்களும், வடகொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வடகொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நன்கு அறிவோம், இந்த ஆர்வலர்கள் வடகொரிய இறையாண்மை மற்றும் அணுசக்தி பற்றிய விவகாரங்களில் பைத்தியக்காரத்தனமாக செய்திகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர், எனவே "தென்கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறி, வடகொரியாவுக்கு எதிரான நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால்,  அதற்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்" என கண்டித்ததுடன், திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர், தென்கொரிய அதிகாரிகளின் நடத்தையால் வடகொரிய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், பொறுப்பற்ற நபர்களை பொறுப்பற்ற முறையில் வடகொரியாவிற்குள் நுழைய தென்கொரிய அதிகாரிகள் அனுமதித்திருப்பது வடகொரியாவின் கவுரவத்தை பாதிக்கிறது. எனவே தென்கொரியாவுடன் பேச வேண்டாம் என வடகொரியா முடிவு செய்துள்ளது. 

north Korea president kim jang unn warning america for south Korea issue

இதனால் வடகொரியா, தென்கொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது, இது இருநாட்டுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருந்து வருவதால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாக வரக்கூடும் என்பதை அனுமானித்துள்ள வட கொரியா,  அமெரிக்காவை முன்னதாகவே எச்சரித்துள்ளது. அதாவது, நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த அமெரிக்கா  விரும்பினால், வட கொரியாவுக்கும் தென் கொரியாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து விலகி, அது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும், என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளதாக அமெரிக்க விவகாரத் துறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்ததாக அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கிம்-ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணு ஆயுத பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்று அது தோல்வியில் முடிந்துள்ள நிலையில் வடகொரியாவிடம் இருந்து இவ்வாறு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது குறிப்பிடதக்கது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios